1000 கிலோ மீற்றர் தூர குதிரையோட்டத்தில் ஆண்கள் வென்று முதலிடம் பெற்ற யுவதி..!!

Read Time:2 Minute, 8 Second

1652kuthiமொங்­கோ­லி­யாவில் நடை­பெற்ற ஆயிரம் கிலோ­மீற்றர் தூரம் கொண்ட குதி­ரை­யோட்டப் போட்­டி­யொன்றில் 19 வய­தான பிரித்­தா­னிய யுவ­தி­யான லோரா பிரையோர் பால்மர் முத­லிடம் பெற்று பதிய சாதனை படைத்­துள்ளார்.

உலகில் மிக நீண்ட தூரம் கொண்­டதும் மிகக் கடி­ன­மா­ன­து­மான குதி­ரை­யோட்டப் போட்டி இது­வாகும். மொங்­கோ­லி­யாவின் பல பகு­தி­க­ளுக்­கூ­டாக 1000 கிலோ­மீற்றர் (620 மைல்) தூரம்­கொண்ட இப்­போட்டி 7 நாட்கள் நீடித்­தது.

சுமார் 30 பேர் இப்­போட்­டியில் பங்­கு­பற்­றினர். இப்­போட்­டியில் லோரா பால்மர் முத­லிடம் பெற்றார். கடந்த 5 வரு­டங்­க­ளாக நடை­பெற்­று­வரும் இக்­கு­தி­ரை­யோட்டப் போட்­டியில் முத­லிடம் பெற்ற முதல் பெண் லோரா ஆவார்.

அத்­துடன் இப்­போட்­டியில் வென்ற முதல் பிரித்­தா­னியர் எனும் பெரு­மையையும் அவர் பெற்­றுள்ளார்.  அமெ­ரிக்­காவைச் சேர்ந்த டெவோன் ஹோர்ன் எனும் வீரர் இப்­போட்­டியில் எல்­லைக்­கோட்டை முதலில் அடைந்தார்.

ஆனால் அவரின் குதி­ரையின் இத­யத்­து­டிப்பில் ஒழுங்­கீ­னங்கள் காணப்­பட்டதால் டெவோர்ன் ஹோர்­னுக்கு இரு மணித்­தி­யா­லங்கள் அப­ராதம் விதிக்­கப்­பட்­டது. அதனால் லோரா பால்மர் முத­லிடம் பெற்­ற­வ­ராக பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்டார்.

இம்­முறை போட்­டியில் பங்குபற்றிய பலர் போட்டியின்போது ஏற்பட்ட காயங்கள் காரணமாக விலகிக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

1652kuthi 1652kuth111

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நெட்டில் அதிகம் தேடப்பட்ட சன்னி லியோன்..!!
Next post முளைச்சு இரண்டிலை விடல .. அதுக்குள்ளே பிகினியா ??ஆசியாவின் அதிசயமாக இலங்கை மாறிக்கொண்டிருக்கிறது..!!