யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சேர் இயன் பொத்தம் 160 கி.மீ நடைபயணம்..!

Read Time:1 Minute, 33 Second

1645Sir-Ian-Bothamயுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிதி சேகரிக்க இங்கிலாந்தின் முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் அணித் தலைவர் சேர் இயன் பொத்தம் இலங்கையில் 160 கி.மீ தூர நடைபயணமொன்றினை மேற்கொள்ளவுள்ளார்.

சேர் இயன் பொத்தம் தனது நடை பயணத்தினை வடக்கில் கிளிநொச்சியில் ஆரம்பித்து தெற்கில் சீனிகம கிராமத்தில் முடிக்கவுள்ளார்.

8 நாட்கள் மேற்கொள்ளவுள்ள இந்த நடைபயணத்தில் முத்தையா முரளிதரன் குமார் சங்கக்கார மஹேல ஜயவர்த்தன சௌரவ் கங்குலி சேன் வோர்ன் மற்றும் மைக்கல் வோகன் ஆகிய கிரிக்கெட் வீரர்களும் ஒவ்வொரு நாள் இணைந்துகொள்ளவுள்ளனர்.

‘Beefy’s Big Sri Lanka Walk’ எனும் இந்த நடைபயணத்தின் மூலம் சேகரிக்கப்படும் பணத்தினைக்கொண்டு 30 வருடகால யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்கு சேர் இயன் பொத்தம் தீர்மானித்துள்ளார்.

சேர் இயன் பொத்தம் ஏற்கெனவே நடைபயணம் மேற்கொண்டு குருதிப் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக நிதிசேகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ரயில் பயணியிடம் திருடிய இராணுவ வீரர் விளக்கமறியலில்..!!
Next post பெண்ணை மிகக்கேவலமான ஆபாச வார்த்தைகளால் திட்டிய ஐமசுமு பி.சபை உறுப்பினர்..!!