திருடிகள் எனக் கூறி தமிழ்ப் பெண்களின் புகைப்படங்களுடன் சுவரொட்டிகள்…!!

Read Time:2 Minute, 24 Second

jaffna_theft_001யாழ்.நல்லூர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் உற்சவ காலத்தில் திருட்டுக்களை தடுப்பதற்காக திருடர்களின் புகைப்படங்களுடன் கூடிய சுவரொட்டிகளை பொலிஸார் ஒட்டியமை கடுமையான விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆலய வளாகத்திற்குள் உற்சபம் ஆரம்பிக்கப்பட்ட தினத்தன்று ஒட்டப்பட்டிருந்த குறித்த சுவரொட்டிகள் நேற்று பல இடங்களில் அகற்றப்பட்டிருந்தபோதும், பொலிஸாரின் இந்நடவடிக்கை பெரும் சார்ச்சையினை ஏற்படுத்தும்.

குற்றவாளிகளுக்கும் மனிதாபிமானம் பார்க்கப்பட வேண்டும் என இலங்கையின் சட்டங்கள் குறிப்பிடுகின்றன. அதற்காகவே நீதிமன்றினால் குற்றம் உறுதிப்படுத்தப்பட்டதன் பின்னரும் அவர்களுடைய பெயர் விபரங்களை ஊடகங்களில் பிரசுரிக்க கூடாதென நீதிமன்றம் கூறுகின்றது.

இந்த நிலையில் திருடிகள் என அடையாளப்படுத்தி தமிழ் பெண்களை புகைப்படம் பிடித்து அத னை சுவரொட்டிகளாக அச்சிட்டு மக்கள் கூடும் இடங்களில் ஒட்டுவது எவ்வளவு தூரம் மனிதாபி மானமற்ற செயல் என மக்கள் விசனப்படுகின்றனர்.

அவர்கள் குற்றவாளிகளாக இருப்பினும் அவர்களது மறுவாழ்வுக்கு சட்டம் மற்றும் சட்டத்தை கை யாழ்பவர்கள் வழிசமைத்துக் கொடுக்க வேண்டுமே தவிர அவர்களை குற்றவாளிகளாக சமுகத்திற்கு அடையாளப்படுத்துவது மிகவும் மோசனமான நடவடிக்கை.

மேலும் திருட்டுக் குற்றச்சாட்டுடன் தொடர்புடையவர்களை இவ்வாறு சுவரொட்டிகளில் அச்சிட்டு ஒட்டுவது இதுவே முதற்தடவை. இதேபோல் இவ்வாறான நடவடிக்கை மிகமோசமான மனிதாபிமானமற்ற நடவடிக்கை எனவும் மக்கள் விமர்சிக்கின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தபால் மூலம் வாக்களிக்க 100,000க்கு மேற்பட்டோர் விண்ணப்பம்..!!
Next post வடமராட்சியில் கிணறு ஒன்றிலிருந்து 17 சடலங்கள் மீட்பு..!!