இஸ்ரேல் பலஸ்­தீன அமைதி பேச்சு 26 கைதிகள் விடு­தலை..!!

Read Time:2 Minute, 59 Second

images (6)பலஸ்­தீ­னத்­து­ட­னான  பேச்சு வார்த்­தைக்கு முன்பே இஸ்ரேல், 26 கைதி­களை விடு­தலை செய்­ய­வுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

இதற்கு முன்­ன­தாக  சிறையில் நீண்ட காலம் அடைக்­கப்­பட்­டி­ருக்கும்  26 கைதி­களை  விடு­விக்கப் போவ­தாக அறி­வித்­தி­ருந்­தது  இஸ்ரேல் கிழக்கு ஜெரு­சலம், மற்றும் வெஸ்ட் பேங்க் பகு­தியில் புதி­தாக குடி­யே­று­வோ­ருக்­கான வீடுகள் கட்­டு­வ­தற்கும் திட்­ட­மிட்­டுள்­ளது.

இவர்­களில் 14 பேர் காஸா பகு­தி­யிலும், 12 பேர் வெஸ்ட் பேங்க் பகு­தி­யிலும் விடு­விக்­கப்­ப­டு­வார்கள் என்று இஸ்ரேல் பிர­தமர் அலு­வ­லகம் வெளி­யிட்ட அறிக்­கையில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

2 வாரத்­திற்கு முன்பே 9 மாதங்­களில் 4 கட்­டங்­க­ளாக 104 கைதி­களை விடு­விக்க இஸ்ரேல் முடிவு செய்­தி­ருந்­தது.

இஸ்­ரேலில் நேற்று முன்­தினம்   இஸ்ரேல் பாது­காப்பு அமைச்சர் மொசே யாலேன் தலை­மையில் ஆலோ­சனைக் கூட்டம் நடை­பெற்­றது. இதில் நீதி அமைச்சர் ஜிப்சி லிவ்னி உட்­பட பல்­வேறு அமைச்­சர்கள் கலந்து கொண்­டனர்.

பிர­தமர் பெஞ்­சமின் அண்­மையில் நெதன்­யாகு ஹெர்­னியா அறுவை சிகிச்சை செய்து கொண்­டதால் இக்­கூட்­டத்தில் கலந்து கொள்­ள­வில்லை.

விடு­தலை செய்­யப்­பட்ட பலஸ்­தீ­னிய கைதிகள்  மீண்டும் இஸ்­ரே­லுக்கு எதி­ராக செயற்­பட்டால் அவர்கள் கைது செய்­யப்­பட்டு சிறையில் அடைக்­கப்­ப­டு­வார்கள் என்று இஸ்ரேல் தரப்பில் வலி­யு­றுத்­தப்­பட்­டது.

இதற்கு பலஸ்­தீ­னிய ஜனா­தி­பதி  மகமூத் அப்பாஸ் பதில் அளித்­த­போது, விடு­விக்­கப்­பட்ட எந்த கைதியும் பலஸ்­தீ­னத்தை விட்டு வெளி­யேற மாட்­டார்கள் என உறுதி அளித்­துள்ளார்.

நாளை ஜெரு­ஸ­லத்தில் நடை­பெறும் பேச்­சு­வார்த்­தையில் இஸ்ரேல் நீதி அமைச்சர் லிவ்னி மற்றும் பலஸ்­தீ­னிய தரப்பில் சயீப் எரிகட் கலந்து கொள்­கி­றார்கள்.

இந்த பேச்சுவார்த்தைக்கு முன்பே 26 பலஸ்தீனிய கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என்று இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்­ளனர்.
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தமிழர்களை ஒருபோதும் எவரும் அடக்க முடியாது- சிங்கப்பூர் முன்னாள் பிரதமர்..!!
Next post மனிதர்களின் ஆயுளைக் கண்டறியும் சோதனை கண்டுபிடிப்பு..!!