வியட்னாம் போரில் காணாமல் போன தந்தை, மகன் இருவரும் 42 ஆண்டுகளுக்கு பின் மீட்பு..!!

Read Time:2 Minute, 26 Second

1580a22வியட்னாம் போரின் போது அமெ­ரிக்க இரா­ணுவம் இலட்­சக்­க­ணக்­கான எடை­யுள்ள குண்­டு­களை வீசி­யது.

அதில் ஒரு குண்டு அங்கு வசித்த ஹோவான் தான்ஹா என்­ப­வ­ரு­டைய வீட்டைத் தாக்கி மனைவி, 2 குழந்­தைகள் இறந்­தனர். இதனால் அவர் பயந்து போய் ஒரு குழந்­தையை தூக்­கிக்­கொண்டு காட்­டிற்குள் சென்றார்.

இது 1971ஆம் ஆண்டில் நடை­பெற்­றது. போர் 1975இல் முடி­வுக்கு வந்த பிறகும் அவர் ஊர் திரும்­ப­வில்லை.

அடர்ந்த காட்டில் மூங்கில் கொண்டு வீடு கட்டி, மரப்­பட்­டையால் தயா­ரித்த ஆடையை உடுத்­திக்­கொண்டு பழங்­களை தின்று தந்­தையும், மகனும் வாழ்ந்­தனர்.

சில வாரங்களுக்கு முன்பு சிலர் காட்டில் விறகு பொறுக்கச் சென்ற போது இவர்கள் 2 பேரின் நட­மாட்டத்தை கண்டு அதி­கா­ரி­க­ளுக்கு தகவல் கொடுத்­தனர்.

உடனே அதி­கா­ரிகள் குழு­வினர் காட்டில் 5 மணி நேரம் தீவிர தேடுதலின் பின் தந்தை, மகனை மீட்­டார்கள். தற்­போது தந்­தைக்கு 82 வயதும், மக­னுக்கு 41 வயதும் ஆகி­றது. கிட்­டத்­தட்ட 2 பேரும் 42 ஆண்­டு­களை காட்­டு­வா­சி­களை போலவே கழித்­தி­ருக்­கி­றார்கள்.

மீட்­கப்­பட்ட ஹோவான் தான்ஹா உடல் மெலிந்து நடக்க கூட முடி­யாத நிலையில் இருந்­ததால் அவரை  தூக்கி வந்து மருத்­துவ சிகிச்சை அளித்­தார்கள். மற்றவருக்கோ ஓரிரு வார்த்தை மட்­டுமே பேச முடி­கி­றது.

இச்­சம்­பவம் பற்றி நகர்­புறத்தில் வசிக்கும் ஹோவானின் மற்­றொரு மகன் கூறும்­போது, சுமார் 20 ஆண்­டுக்கு முன்பு தந்­தையை சந்­தித்த போது வெளியே வரும்­படி கூறினேன்.

ஆனால் என்னுடைய கோரிக்கைக்கு அவர் செவிசாய்க்க மறுத்து காட்டிலேயே வசித்தார்’ என்று தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தாக்குதல் நடத்தியவர்கள்மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆர்ப்பாட்டம்..!!
Next post 3 மாதம் 2 குழந்தைகளோடு கடலில் தத்தளித்த தம்பதி மீட்பு..!!