வடக்குத் தேர்தலில் கூட்டமைப்பு அதிக பெரும்பான்மையை பெறும்: ஹக்கீம்..!!

Read Time:2 Minute, 7 Second

downloadவடக்கு உட்பட மூன்று மாகாணசபைகளுக்குமான தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுவதனை வைத்து கட்சியை பிளவுபடுத்தும் முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன.

இவ்வாறான குள்ளநரிகளின் தந்திரத்திற்கு அஞ்சுகின்ற ஒரு கட்சியாக முஸ்லிம் காங்கிரஸ் இருக்காது எமது கட்சியின் ஒற்றுமையை விலைபேசி மாற்றுத்தரப்பிற்கு அங்கத்தவர்களை தாரைவார்த்துக்கொடுக்கின்ற சில சகுனிவேலைகள் கட்சிக்குள்ளேயே இடம்பெறுகின்றன என்று சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதியமைச்சருக்குமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

வடக்கைப் பொறுத்தமட்டில் இந்தத்தேதலில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு அதிக பெரும்பான்மையை பெறும். அந்த அடிப்படையில் நாம் தனித்து போடியிடுவதால் பெரிய அரசியல் சாகசங்களைச் செய்யப்போவதில்லை.

எமது முடிவினால் பாரிய மாற்றங்கள் எதுவும் ஏற்படாது. ஆனாலும், முஸ்லிம் காங்கிரஸை அரச தரப்பில் இணைத்துக்கொண்டு எங்கள் முதுகில் சவாரி செய்து தங்களுடைய உறுப்பினர்களை அதிகரிக்க அரசதரப்பு முஸ்லிம் அமைச்சர் ஒருவர் முயற்சித்தார்.

அதற்கு உடந்தையாக அரச தரப்பில் அபிவிருத்தி அமைச்சர் ஒருவரும் ஒத்தாசை வழங்கினார். இவை அனைத்தும் எங்களை பலவீனப்படுத்துவதற்காஅன முயற்சியின் அங்கமாகத்தான் அரங்கேறுகின்றன என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சூறாவளியின் கோரத் தாண்டவம்…. (VIDEO)
Next post கிராண்ட்பாஸில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்..!!