எழுந்து ஓடிய ‘பிணத்தை’ப் பார்த்து அதிர்ந்த சீன அதிகாரிகள்..!!
சீனாவில் அரசின் நிவாரணா உதவி பெறுவதற்காக பிணம் போல் நடித்தவர், வெப்பம் தாங்காமல் எழுந்து ஓடியதால் அதிகாரிகளிடம் மாட்டிக் கொண்டார்.
சீனாவில் இந்த வருடம் மிகவும் கொடுமையான கோடைக்காலம் நிலவுகிறது. வெப்பம் மற்றும் அனல் காற்றின் தாக்கத்தில் பலர் பரிதாபமாக பலியாகி வருகின்றனர்.
அப்படி பலியானவர்களது குடும்பத்திற்கு நிவாரணமாக இழப்பீடு வழங்கி வருகிறது சீன அரசு.அவ்வாறு வழங்கப்படும் நிவாரண உதவியைப் பெறுவதற்காக, ஹூபே நகரைச் சேர்ந்த நபர் ஒருவர் அனல் காற்றில் சிக்கி பலியானவர் போல் நடித்தார்.
அதிகாரிகள் வந்து அவரது உடலைப் பரிசோதித்தனர்.திடீரென வெப்பத்தின் தாக்கம் அதிகமாகியதால், பிணமாகப் படுத்திருந்த நபருக்கு தாகம் அதிகரித்தது. தண்ணீர் குடிக்காவிட்டால் உயிரே போய் விடும் நிலையில் இருந்த அவர், உயிரைக் காத்துக் கொள்ள உடனடியாக அருகில் இருந்த பாட்டிலில் இருந்த தண்ணீரை எடுத்துக் குடித்தார்.
இறந்து கிடந்த பிணமொன்று திடீரென எழுந்து தண்ணீர் அருந்துவதைக் கண்ட அரசு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
தனது சாயம் வெளுத்துப் போனதால் தப்பி ஓட முயன்ற அந்நபரை போலீசார் விரட்டிச் சென்று கைது செய்தனர். மேலும், அவருக்கு உடந்தையாக இருந்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating