இயேசுவுக்கு மரணதண்டனை: சர்வதேச நீதிமன்றில் வழக்கு..!!
இயேசு கிறிஸ்துவுக்கு சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் முறையற்ற விதத்தில் மரணதண்டனை விதிக்கப்பட்டமைக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரவுள்ளதாக கென்யாவைச் சேர்ந்த சட்டத்தரணி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கென்யாவின் நீதிமன்றங்களின் அமைப்பின் முன்னாள் பேச்சாளரான டோலா இன்டிடிஸ் என்பவரே இவ்வாறு வழக்குத் தொடரப் போவதாக அறிவித்துள்ளதுடன் முறைப்பாடொன்றையும் செய்துள்ளார்.
இத்தாலிய குடியரசு, இஸ்ரேல் மற்றும் பலருக்கு எதிராக அவர் வழக்குத் தொடரப்பபோவதாக அறிவித்துள்ளார்.
‘2000 வருடங்களுக்கு பல அதிசயங்களை நிகழ்திய கடவுளின் மகன் இயேசுவுக்கு சட்டத்திற்கு புறம்பாக சித்திரவதைகுட்படுத்தி மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடவுளுக்கு எதிராக குற்றம் புரிவதாக குற்றம் சாட்டப்பட்டு யூதர்களினால் கைதுசெய்யப்பட்ட இயேசு குற்றமற்றவர் என ரோமன் ஆளுநர் பொன்டியஸ் பிலாத்து கூறிய பின்பும் இயேசுவுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது’ என டோலா இன்டிடிஸ் தெரிவித்துள்ளார்.
‘என்ன குற்றத்திற்கான இயேசுவிற்கு மரண தண்டனை வழங்கப்பட்டது? ‘ எனக் கேள்வி எழுப்பியுள்ள அவர், சட்டத்தை நிலைநாட்டாது ரோமன் நீதிமன்றம் தவறிழைத்துள்ளது. மேலும் அங்கு மனித உரிமையும் மீறப்பட்டுள்ளதென தெரிவித்துள்ளார்.
இதனால் முறையற்ற விதத்தில் தண்டனை வழங்கிய இத்தாலிய குடியரசு மற்றும் இஸ்ரேல் மற்றும் பலருக்கு எதிராக வழக்குத்தொடுக்க முயற்சிக்கின்றார் சட்டத்தரணி இன்டிடிஸ்.
பிரெஞ்சு வீரமங்கை ஜோன் ஒவ் ஆர்க்கை ஆங்கிலேயர்கள் விசாரணை நடத்தியமை தண்டனை வழங்கியமை முறையற்றது என பின்னர் கண்டறியப்பட்டதைப் போல் இயேசு கிறிஸ்துக்கு விதிக்கப்பட்ட தண்டனையும் முறையற்றதாக பிரகடனப்படுத்தப்பட வேண்டுமென லோடஸ் இன்டிடிஸ் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் இன்டிடிஸுக்கு வெற்றி கிடைக்காது ஏன கருதப்படுகிறது. ஏனெனில் சர்வதேச நீதிமன்றம் நாடுகளிடையேயான பிணக்குகள் தொடர்பிலான சட்டவரம்புகளையே கொண்டுள்ளது. எனவே இவ்வழக்கினை சர்வதேச நீதிமன்றம் ஏற்காது என சட்ட நிபுணர்கள் கூறுகின்றனர்.
இவ்வழக்கானது நாடொன்றினால் தாக்கல் செய்யப்படாததால் இது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் அதிகாரத்துக்கு உட்படாது எனன கொலம்பிய சட்டக் கல்லூரியின் பேராசிரியர் அந்தியா ரொபர்ட்ஸ் தெரிவித்துள்ளார்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating