அல்ஜீரியாவில் கட்டாய நோன்புக்கு எதிராக மதிய உணவு உட்கொண்டு ஆர்ப்பாட்டம்..!!

Read Time:2 Minute, 35 Second

download (35)ஆபி­ரிக்க நாடான அல்­ஜீ­ரி­யாவில் கட்­டாய நோன்­பிற்கு தமது எதிர்ப்பை தெரி­விக்கும் முக­மாக சுமார் 300 பேர் ஒன்­றி­ணைந்து பகி­ரங்க மதிய உணவு உட்­கொண்டு எதிர்ப்பை வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளனர்.

இச்­சம்­பவம் அல்­ஜீ­ரி­யாவின் தலை­ந­க­ரான அல்­ஜ­யர்­ஸி­லி­ருந்து சுமார் 100 கி.மீ. தொலை­வி­லுள்ள டிஷி ஒளஸொவ் எனு­மி­டத்தில் கடந்த சனிக்­கி­ழமை  நடை­பெற்­றுள்­ளது.

வட ஆபி­ரிக்­காவில் இவ்­வாறு நோன்­புக்கு எதி­ராக செயற்­ப­டு­வது மிக அரி­தான ஒரு செயற்­பா­டாகும். ஏனெனில் அங்கு சட்­ட ­ரீ­தி­யாக ரமழான் மாதத்தில் நோன்பு நோற்­கப்­பட வேண்டும்.

பேர்பர் குழுவைச் சேர்ந்த கெபை­லியா பிர­தே­சத்­தி­லுள்ள 3 இளை­ஞர்கள் வீட்­டுக்கு வெளியில் நோன்பு நேரத்தில் உணவு உட்கொண்டுள்­ளனர்.

இதனால் இவர்கள் மீது அந்­நாட்டு பாது­காப்பு படை­யினர் விசா­ரணை மேற்­கொண்­டுள்­ளனர். இத­னை­ய­டுத்தே இவ்­வார்ப்­பாட்டம் நடத்­தப்­பட்­டுள்­ளது.

இந்த எதிர்ப்பு நட­வ­டிக்­கையை’ பேர்பர் எனும் ஒரு சிறு­பாண்­மை­யின குழுவே நடத்­தி­யுள்­ளது. இதில் உள்­நாட்டு முஸ்­லிம்கள் எவரும் கலந்­து­கொள்­ள­வில்லை எனத் தெரி­விக்­கப்­ப­டு­கின்றது.

இந்த எதிர்ப்பு நட­வ­டிக்கை குறித்து கெபை­லியா பிர­தேச சுயாட்சி இயக்க தலைவர் பௌயசிஸ் அயிட் செபிப் கூறு­கையில், ‘தமது நம்­பிக்­கையின் படி நோன்பு நோற்­காத பிர­ஜைகள் மீது அடக்­கு­முறை மற்றும் விசா­ர­ணை­களை மேற்­கொள்­வ­தற்கு எமது எதிர்ப்­பினைக் காட்­டு­வ­தற்கே நாம் இங்கு கூடி­யுள்ளோம்’ எனத் தெரி­வித்­துள்ளார்.

கடந்த வருடம் இதே பிர­தே­சத்­தி­லுள்ள நோன்பு நோற்­கா­த­வர்­களை இஸ்­லாத்­திற்கு எதி­ரா­ன­வர்கள் எனக் கூறி தண்­ட­னைகள் விதிக்­கப்­பட்­டுள்­ளன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விமானத்தை பயன்படுத்தாமல் 201 நாடுகளுக்கும் சென்று வந்த முதல் மனிதர்..!!
Next post பிரான்ஸ் ‘அனல் பலூன் சாகச விழா’: ஒரே நேரத்தில் 408 பலூன்கள் பறந்து உலக சாதனை..!!