விமானத்தை பயன்படுத்தாமல் 201 நாடுகளுக்கும் சென்று வந்த முதல் மனிதர்..!!
பிரித்தானியாவின் லிவர்பூல் நகரைச் சேர்ந்த 33 வயதான கிரஹம் ஹியூக்ஸ் என்ற நபரே இப்பெருமையினைப் பெற்றவராவார். இவர் உலகிலுள்ள 201 நாடுகளை 1426 நாட்களில் (சுமார் நான்கு ஆண்டுகள்) விமானத்தின் உதவியின்றி சுற்றி வந்துள்ளார்.
சுமார் 160 ஆயிரம் மைல் தூரம் பயணித்துள்ள ஹியூக்ஸ், விமானமின்றி சரக்குக் கப்பல், பஸ், ரயில், டெக்ஸி போன்ற வாகனங்களிலேயே பயணத்துள்ளார்.
கிரஹம் ஹியூக்ஸ் கடந்த 2009ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் திகதி லிவபூலிலிருந்து தனது பயணித்தை ஆரம்பித்தார். கடந்த வருடம் டிசம்பர் மாதமளவில் தென் சூடானை சென்றடைந்ததுடன் வெற்றிகரமாக பயணத்தினை முடிவு செய்துள்ளார். இவர் பயணத்தை ஆரம்பித்த வேளையில் தென் சூடான் எனும் நாடு உருவாகியிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதன்போது இலங்கை உட்பட ஆசியா, ஆபிரிக்கா, மத்திய கிழக்கு, ஐரோப்பா, மத்திய- வட-தென் அமெரிக்கா, கரீபியன் தீவுகள் என அனைத்து இடங்களுக்கும் பயணித்துள்ளார். தற்போது ஹியூக்ஸ் தனது பயணத்தினை 4 நிமிட ஆவணப்படமாக வெளியிட்டுள்ளார். ஒவ்வொரு நாட்டின் காட்சியையும் ஏறத்தாழ தலா ஒரு விநாடி அதில் இடம்பெறச் செய்துள்ளார்.
இப்பயணத்தின் போது உடைந்த படகில் சென்ற திகில் அனுபவம், பொலிஸாரினால் கைது, கடற்கொள்ளையர்களின் அச்சுறுத்தல் போன்ற சம்பவங்களையும் அவர் எதிர்கொண்டுள்ளார்.
கொங்கோவில் தான் உளவாளி என்ற சந்தேகத்தில் சிறையில் அடைக்கப்பட்டதாகவும் ரஷ்யாவுக்குள் ஊடுருவ முயன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். முதல் தடவை ஆபிரிக்க நாடான மால்டாவை மறந்துவிட்டாராம். பின்னர் இரண்டாவது தடவை பயணம் மேற்கொண்டு மால்டாவில் கால் பதித்தாராம்.
கடல்கடந்து செல்ல வேண்டிய இடங்களுக்கு பெரும்பாலும் சரக்குக் கப்பல்களில் அவர் பயணித்துள்ளார். ஆனால், டொமினிக்கன் குடியரசு நோக்கிச் செல்லும்போது உல்லாசப் பயணக் கப்பலொன்றில் பயணிக்கும் வாய்ப்பு கிடைத்ததாம்.
இந்த பயணத்தின் போது ஹியூக்ஸ் வாரத்திற்கு 100 ஸ்ரேலிங் பவுண்களை செலவு செய்துள்ளார். மேலும் குடிநீர் திட்டத்திற்காக 9 ஆயிரம் ஸ்ரேலிங் பவுண் நிதியும் சேகரித்துள்ளார்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating