அமெரிக்காவின் புகழ்பெற்ற உளவியல் பேராசிரியர் இளமையில் குடும்பத்தினரை கொன்றமை அம்பலம்..!!
அமெரிக்காவில் பெரும் புகழ்பெற்ற உளவியல் நிபுணர்களில் ஒருவரான பேராசிரியர் ஜேம்ஸ் சென் ஜேம்ஸ், இளம் பருவத்தில் தனது குடும்பத்தினரையும் சகோதரியையும் கொலை செய்து தண்டனையிலிருந்து தப்பியவர் என்பது இப்போது அம்பலமாகியுள்ளது.
1967.08.04 ஆம் திகதி, டெக்ஸாஸ் மாநிலத்தில் வசித்த, சௌத் வெஸ்டர் பல்கலைக்கழக உயிரியல் பேராசிரியரான டாக்டர் ஜோர்டன் வொல்கொட்டும் அவரின் மனைவி எலிஸபெத்தும் 17 வயதான மகள் லிபியும் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
ஜோர்டன் வொல்கொட்டின் மகன் ஜேம்ஸ்வொல்ட் தான் இப்படுகொலையை செய்தவர் எனக் கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது ஜேம்ஸ் வொல்கொட் 15 வயது சிறுவனாக இருந்தார். கொலைக் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்ட அவர் தான் குடும்பத்தினரை வெறுத்ததாக கூறினார்.
எனினும் அவர் சிறுவனாகவும் மனநிலை பாதிக்கப்பட்டவனாகவும் இருந்ததால் தண்டனை பெறவில்லை. ஆனால் 6 வருடகாலம் அவர் மனநோய் வைத்தியசாலையில் தங்கவைக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டார்.
அவர் குணமடைந்தவராக பிரகடனப்படுத்தப்பட்ட பின் வைத்தியசாலையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
பின்னர் தனது பெயரை ஜேம்ஸ் சென் ஜேம்ஸ் என மாற்றிக்கொண்ட ஜேம்ஸ் வொல்கொட் புதிய வாழ்க்கையைத் தொடங்கினார். உளவியல் துறையில் பல பட்டங்களைப் பெற்ற ஜேம்ஸ் சென் ஜேம்ஸ், கலாநிதிப் பட்டமும் பெற்று இலினோய்ஸ் மாநிலத்திலுள்ள மில்கின் பல்கலைக்கழகத்தில் 1976 ஆம் ஆண்டு முதல் உளவியல் ஆசிரியராக பணியாற்றத் தொடங்கினார்.
உளவியல் கல்வித்துறைப் பணிகளுக்காக பல விருதுகளை வென்ற அவர் இலினோய் மாநிலத்தில் அதிகம் மதிக்கப்படும் உளவியல் நிபுணர்களில்ஒருவராக விளங்குகிறார். ஆனால், அவர் 46 அற்ப காரணங்களுக்காக தனது குடும்பத்தினரை கொலை செய்தவர் என்ற விடயத்தை அமெரிக்க பத்திரிகையொன்று கண்டுபிடித்து அம்பலமாக்கியுள்ளது.
இது குறித்து கருத்துத் தெரிவிப்பதற்கு பேராசிரயர் ஜேம்ஸ் சென் ஜேம்ஸ் மறுத்துள்ளார்.
பேராசிரியர் ஜேம்ஸ் சென் ஜேம்ஸ் ஒரு முன்னாள் கொலையாளி என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது பல்கலைக்கழகத்தின் நடத்தை விஞ்ஞானத் திணைக்களத் தலைவராக பதவி வகிக்கும் பேராசிரியர். அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என பலர் கோரினர்.
எனினும் அவர் தொடர்ந்தும் அப் பதவியிலிருப்பார் என மேற்படி பல்லைக்கழகம் தெரிவித்துள்ளது. அவரை ஆபத்தான ஒருவராக தான் கருதவில்லை என பல்லைக்கழக மாணவர் ஒருவர் கூறியுள்ளார்.
எனினும், அவர் இப்பல்கலைக்கழத்தில இணைவதற்கு முன்னர் தனது கடந்த காலம் குறித்து அதிகாரிகளுக்கு தெரிவித்திருக்க வேண்டும் என சிலர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
Average Rating