‘கல் குழந்தை’ பெற்றெடுத்த அற்புத தாய்..!!

Read Time:3 Minute, 39 Second

1509Stone-babyகடந்த 400 ஆண்­டு­களில், இது போன்ற 300 நிகழ்­வுகள் மருத்­துவ இலக்­கி­யத்தில் இடம்பெற்­றுள்­ளன.

அதில் ஒன்று 50 வரு­டங்­க­ளுக்கு மேலாக கருவைச் சுமந்து பெற்­றெ­டுத்த ஒரு பெண்ணின் கதை.

1955 ஆம் ஆண்டு காஸா­பி­ளான்கா என்னும் சிறிய கிரா­மத்தில் ஒரு இளம் பெண் பிர­சவ வலியில் துடித்துள்ளார். 48 மணி­நே­ர­மா­கியும், அந்த பெண்­ணுக்கு குழந்தை பிறக்­க­வில்லை.

அதனால் அவரை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்­றனர். இருப்­பினும் வைத்தியர்களால், அந்த பெண்­ணுக்கு எதற்கு குழந்தை பிறக்­க­வில்லை என்று தெரி­ய­வில்லை.

வலியால் மயக்­க­ம­டைந்த அப்­பெண்ணை சத்­தி­ர­சி­கிச்சை அறையில் வைத்­தி­ருந்­தனர். மயக்கம் தெளிந்த பின்னர் அப்பெண் மாய­மானார்.

பல நாட்­க­ளுக்கு வலி தொடர்ந்த நிலையில், அப்­பெண்­ணுக்கு திடீ­ரென்று வலி­யா­னது நின்­று­விட்­டது. அதனால் அப்­பெண்ணும் குழந்தை பிறக்க சில நாட்கள் ஆகு­மென்று, கர்ப்­ப­மாக இருப்­பதை மறந்து அப்­ப­டியே விட்­டு­விட்டார்.

சஹ்ரா  என்ற இப் பெண் மூன்று குழந்­தை­களை தத்­தெ­டுத்து வளர்த்து, பாட்டி ஆகி­விட்டார். இப்­போது அவ­ருக்கு 75 வய­தா­கி­றது.

இந்த நிலையில் திடீ­ரென்று அவ­ருக்கு கடு­மை­யான வலி­ ஏற்­பட்­டது. இதனால் வைத்தியசாலைக்கு சென்றார். எந்த ஒரு வைத்தியராலும், அவ­ருக்கு ஏற்­பட்­டி­ருக்கும் வலிக்கு காரணம் என்­ன­வென்று கண்­ட­றிய முடியவில்லை.

அப்போது ஒரு வைத்தியர் சஹ்ராவின் வீக்கமடைந்த வயிற்றினைப் பார்த்து, ஒருவேளை அது கர்ப்பப்பைக் கட்டியாக இருக்குமோ என்று நினைத்து, ஸ்கேன் செய்து பார்த்தார்.
ஸ்கேனிங் அறிக்கையைப் பார்த்த அனைத்து வைத்தியர்களுக்கும் ஒரு பெரிய அதிர்ச்சி ஏற்பட்டது. அது என்னவென்றால், சஹ்ராவின் வயிற்றில் கறைபடிந்த குழந்தையானது இருக்கிறது.

அத்தகைய குழந்தை பிறக்க வாய்ப்பில்லை. ஏனெனில் அந்த குழந்தை கர்ப்பப்பைக்கு வெளியே, சஹ்ராவின் உள்ளுறுப்புகளுடன் இணைந்து இறந்துள்ளது. இத்தகைய நிலையில் உள்ள குழந்தையை ‘லித்தோபீடியன்’ (டுiவாழிநனழைn), அதாவது ‘கல் குழந்தை’ என்று சொல்வார்கள்.

எனவே வைத்தியர்கள் சிசேரியன் மூலம் அந்த கல் குழந்தையை வெளியேற்ற முடிவு செய்தார்கள். பொதுவாக இந்த சிசேரியனின் போது, அதிகப்படியான இரத்தம் வெளியேறும் என்பதால், தாய் இறக்க வேண்டிய நிலை ஏற்படும். ஆனால் அதிர்ஷ்டவசமாக, சஹ்ராவின் உயிருக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மண்மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு..!!
Next post திருமலை மீனவர் மீதான தாக்குதல், சந்தேகநபர் ஒருவர் காணப்பட்டார்..!!