பரபரப்பான ஆட்டத்தில் பராகுவே அணியை வீழ்த்தியது சுவீடன்
உலக கோப்பை கால்பந்தின் 7-வது நாளான நேற்று `ஏ’ பிரிவில் நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் ஈக்வடார்- கோஸ்டாரிகா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் ஈக்வடார் 3-0 என்ற கோல் கணக்கில் கோஸ்டாரிகாவை வீழ்த்தியது. அந்த அணியில் டேனோரியா கார்லோஸ், அகஸ்டின், கவிடேஸ் இவான் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். நுரிம்பர்க்கில் நடந்த `பி’ பிரிவுகளுக்கிடையேயான ஆட்டத்தில் இங்கிலாந்து- டிரினிடாட்டை சந்தித்தது. இங்கிலாந்து கேப்டன் பெக்காம், லம்பார்டு, குரோச், ஓவன் ஆகியோர் தங்களுக்கு கிடைத்த வாய்ப்புகளில் கோல் அடிக்க தவறிவிட்டனர். முதல் பாதியில் இரு அணியும் கோல் போடவில்லை.
இதனால் 2-வது பாதியில் எப்படியும் வெற்றி பெற்று தீரவேண்டும் என்ற எண்ணத் தில் ரூனி களம் இறக்கப்பட்டார். வெகுநேர போராட்டத்திற்கு பின் பெக்காம் அடித்த பந்தை 83-வது நிமிடத்தில் குரோச் தலையால் முட்டி கோல் அடித் தார். மேலும் கடைசி நிமிடத்தில் ஸ்டீபன் ஜெர்ரார்டு ஒரு கோல் அடித்தார். இதனால் இங்கிலாந்து 2-0 என்ற கணக்கில் டிரினிடாட்டை வென்றது.
`பி’ பிரிவில் மற்றொரு ஆட்டத்தில் சுவீடன்-பராகுவே அணிகள் மோதின. ஆட்டத்தின் 9-வது நிமிடத்தில் சுவீடன் வீரர் கிம்கால்ஸ்ட்ராம் 25 மீட்டர் தூரத்தில் இருந்து பந்தை கோல் நோக்கி அடித்தார். ஆனால் பராகுவே கோல் கீப்பர் அல்டோபாப் அடிலா அருமையாக அதை தடுத்தார். அடுத்த நான்கு நிமிடங்களில் கால்ஸ்ட்ராம் மீண்டும் கோல் அடிக்க முயற்சி செய்தார். இதுவும் வீணானது.
சுவீடன் வீரர்களின் கோல் அடிக்கும் வாய்ப்பை அல்டோ பாப் பல முறை தடுத்தார். மேலும் பராகுவேயின் பின் களஆட்டம் சிறப்பாக இருந்ததால் சுவீடன் வீரர்கள் கோல் அடிக்க மிகவும் சிரமப்பட்டனர். இதனால் ஆட்ட நேர முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.
ஆட்டம் டிராவை நோக்கி சென்று கொண்டிருந்த நிலையில் 88-வது நிமிடத்தில் சுவீடனின் பிரிடி ஜங்டெர்க் தலையால் முட்டி ஒரு கோலை அடித்தார். இதனால் சுவீடன் 1-0 என முன்னிலை அடைந்தது. ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் பிரிடி மேலும் கோல் அடிக்க முயற்சித்தார். ஆனால் அதை பராகுவே கோல் கீப்பர் தடுத்துவிட்டார். முடிவில் சுவீடன் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
சுவீடன் இந்த வெற்றியின் மூலம் 2-வது சுற்றுக்கான வாய்ப்பை சற்று பிரகாசப்படுத்திக் கொண்டுள்ளது. அந்த அணி இங்கிலாந்துக்கு எதிராக 20-ந் தேதி நடை பெறும் ஆட்டத்தை டிரா செய்தால் எளிதாக 2-வது சுற்றில் நுழைந்துவிடும். சுவீடன், டிரினிடாட்டிற்கு எதிரான முதல் ஆட்டத்தை டிரா செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதே சமயத்தில் பராகுவேக்கு எதிரான ஆட்டத்தில் டிரினிடாட் வெற்றி பெற்றுவிட்டால் சுவீடனும், டிரினிடாட்டும் ஒரே புள்ளிகளுடன் சம நிலைப்பெறும். இதில் கோல் அடிப்படையில் ஏதாவது ஒரு அணி 2-வது சுற்றுக்கு தேர்வு செய்யப்படும்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...