சிறையில் மறந்துவிடப்பட்ட அமெரிக்க மாணவருக்கு 40 இலட்சம் டொலர் இழப்பீடு..!!

Read Time:2 Minute, 9 Second

1476america (1)அமெ­ரிக்­காவில் கலிஃ­போர்­னி­யாவைச் சேர்ந்த மாணவன் ஒரு­வருக்கு 40 இலட்சம் டொலர்­க­ளுக்கும் அதிகமாகப் பணத்தை இழப்­பீ­டாகக் கொடுப்­ப­தற்கு அமெ­ரிக்­காவின் நீதி­மன்றம்  ஒப்­புக்­கொண்­டுள்­ளது.

கைகள் விலங்­கி­டப்­பட்ட நிலையில், பொலிஸ் சிறைக்­கூ­டத்­துக்குள் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்த இந்த இளை­ஞனை அதி­கா­ரிகள் முழு­மை­யாக மறந்­து­போன நிலையில் கைவிட்­டி­ருந்­தனர்.

இதனால் நான்கு நாட்­க­ளாக தண்­ணீரும் உண­வு­மில்­லாமல் தவித்த இளைஞன் தனது சிறு­நீ­ரையே குடிக்க நேர்ந்­துள்­ளது.

போதைப்­பொருள் தேட­லின்­போதே இந்த இளை­ஞ­னையும் பொலிஸார் பிடித்துச் சென்­றி­ருந்­தனர்.

ஆனால், அவர் கைது செய்­யப்­ப­டவும் இல்லை. குற்­றச்­சாட்­டுக்கள் எதுவும் அவர்­மீது பதிவு செய்­யப்­ப­டவும் இல்லை.

ஆனால் கைவி­லங்­கி­டப்­பட்ட நிலை­யி­லேயே சிறைக்­கூ­டத்தில் வைக்­கப்­பட்­டி­ருந்த அவரை எவ­ருமே கவ­னிக்­க­வில்லை. தான் சுவரில் உதைத்து கத்தி கூக்­கு­ர­லிட்­ட­தாக அந்த இளைஞன் தெரி­வித்­துள்ளார்.

4 நாட்­க­ளாக சிறைக்­கூ­டத்தில் நீரின்றி தவித்த இளைஞன் பின்னர் 5 நாட்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற நேர்ந்­தது. இதில் 3 நாட்கள் தீவிர கண்­கா­ணிப்புப் பிரி­விலும் இருந்­துதான் அவர் மீண்­டுள்ளார்.

இந்த சம்பவத்தால் வருத்தமடைந்துள்ளதாக அமெரிக்க போதைப் பொருள்  தடுப்பு பொலிஸார் தெரி­வித்­துள்­ள­னர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அதிபர் தேர்தலில் ஹில்லாரி போட்டி..!!
Next post விபத்தில் மூவர் பலி: இருவர் படுகாயம்..!!