அதிபர் தேர்தலில் ஹில்லாரி போட்டி..!!

Read Time:3 Minute, 8 Second

download (8)முன்னாள் அமைச்சர் ஹில்லாரி கிளிண்டனுக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா நேற்று வெள்ளை மாளிகைக்கு அழைத்து விருந்து கொடுத்தார்.

இருவரும் ஒன்றாக விருந்து சாப்பிட்டனர். இந்த விருந்தின்போது அதிபர் தேர்தலில் ஹில்லாரி கிளிண்டன் போட்டியிடுவது குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.

அமெரிக்க முன்னாள் அதிபர் கிளிண்டனின் மனைவி ஹில்லாரி கிளிண்டன். இவர், ஒபாமா முதல்தடவையாக அமெரிக்க அதிபராக பதவி வகித்தபோது வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்து பாராட்டு பெற்றவர்.

ஒபாமா இரண்டாவது முறையாக அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டு பதவி வகித்து வருகிறார். ஆனால் வெளியுறவுத்துறை அமைச்சர் பதவியை ஹில்லாரி கிளிண்டன் ராஜினாமா செய்துவிட்டார்.

இதற்கு காரணம் அதிபர் ஒபாமாவுக்கும் ஹில்லாரிக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதை உறுதிப்படுத்தும் வகையில் ஹில்லாரி, தனது மகள் திருமணத்திற்கு ஒபாமாவை அழைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் ஹில்லாரியை ஒபாமா அழைத்து, வெள்ளை மாளிகையில் விருந்து கொடுத்தார். அப்போது வரும் அதிபர் தேர்தலில் ஹில்லாரியை நிறுத்துவது குறித்து ஒபாமா விவாதித்ததாக தெரிகிறது.

மேலும் இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க அமெரிக்கா ஏற்பாடு செய்து வருகிறது. இதுகுறித்தும் ஹில்லாரியுடன் ஒபாமா விவாதித்ததாக தெரிகிறது. அமெரிக்க அதிபராக ஒபாமா தேர்ந்தெடுக்கப்பட்டால் அவரது கணவர் கிளிண்டனைவிட சிறந்த முறையில் செயல்படுவார் என்று கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

மேலும் பல முக்கிய பிரமுகர்களும்,பெண்கள் அமைப்புகளும் ஹில்லாரி அதிபராக வந்தால் திறம்பட செயல்படுவார் என்றும் கருத்து தெரிவித்துள்ளன.

விருந்தில் கோழிக்கறி உள்பட பல உணவுப்பொருட்கள் சுவையாக சமைக்கப்பட்டு பரிமாறப்பட்டதாக நிருபர்களின் கேள்விக்கு பதில் அளித்த வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விற்பனைக்கு வரும் 70 இலட்சம் பெறுமதியான 24 கரட் தங்கக் காலணி..!!
Next post சிறையில் மறந்துவிடப்பட்ட அமெரிக்க மாணவருக்கு 40 இலட்சம் டொலர் இழப்பீடு..!!