பாகிஸ்தானின் 12வது அதிபராக மம்நூன் ஹூசைன்’ தேர்வு..!

Read Time:2 Minute, 5 Second

31-mamnoonhussain-300-jpgபாகிஸ்தானின் புதிய அதிபராக இந்தியாவில் பிறந்த மம்நூன் ஹூசைன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் எதிரவரும் செப்டம்பர் மாதம் 9ம் தேதி பாகிஸ்தானின் 12வது அதிபராக பதவியேற்க உள்ளார்.

பாகிஸ்தானின் 12 வது அதிபரைத் தேர்ர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. அதில், பிரதமர் நவாப் ஷெரீப் தலைமையிலான முஸ்லீம் லீக் (என்) கட்சியைச் சேர்ந்த 73 வயதான மம்நூன் ஹூசைன் கலந்து கொண்டார்.

மம்நூனுக்கும், பாகிஸ்தானின் தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சியின் வேட்பாளர் முன்னாள் நீதிபதி வாஜி{ஹதீன் அகமது ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவியது.

வெற்றி பெற 263 வாக்குகளே போதுமானது என்ற நிலையில், {ஹசேன் 277 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.எனவே, வரும் செப்டம்பர் மாதம் 9ம் தேதி மம்நூன் பாகிஸ்தானின் புதிய அதிபராக பதவியேற்பார் என அதிகாரப் பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுவரை, தற்போதைய அதிபர் ஆசிப் அலி ஜர்தாரியே பதவியில் நீடிப்பார்.வெற்றி பெற்ற மம்நூன், இந்தியாவில் பிறந்தவர்.

உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஆக்ரா தான் இவரது சொந்த ஊர். 1947ம் ஆண்டு இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் பிரிந்த போது, இவரது குடும்பம் பாகிஸ்தானுக்கு இடம் பெயர்ந்தது குறிப்பிடத்தக்கது.

மம்நூன் ஏற்கனவே 1999-ஆம் ஆண்டு ஜூன்-அக்டோபர் மாதங்களில் சிந்து மாகாண ஆளுநராக இருந்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விக்கிலீக்ஸுக்கு இரகசிய ஆவணங்களை அளித்த இராணுவ அதிகாரிக்கு 136 வருட சிறை..!!
Next post கேம்பிறிட்ச் இளவரசனுக்கு ஜனாதிபதி வாழ்த்து..!!