பாடுவதை நிறுத்த மறுத்ததால் சுற்றுலாப்பயணி கொலை..!!

Read Time:3 Minute, 25 Second

downloadதாய்லாந்தின் கிராபி என்ற இடத்தில் உள்ள ஆவோ நங் கடற்கரைப் பகுதியில் உள்ள லாங் ஹார்ன் சலூனின் கேளிக்கை விடுதியில் இசை நிகழ்ச்சி ஒன்று நடந்துகொண்டிருந்தது.

இசையுடன் இணைந்து கொள்ளலாம், நல்ல இசை, நல்ல ஊழியர்களுடன் கேளிக்கை என்றே இந்த விடுதி இணையதளத்தில் தங்களது இசை நிகழ்ச்சி குறித்து விளம்பரப்படுத்தியிருந்தது.

நேற்று விடுதியின் மேடையில் அவர்களது பாடகர்கள் மூன்று பேர் இசை நிகழ்ச்சி நடத்திக் கொண்டிருந்தனர்.

அப்போது பாபி ரே கார்ட்டர் (51 ) என்ற அமெரிக்கர் தனது மகன் ஆடமுடன் (27 ) அங்கு வந்திருந்தார். பாடகர்களுடன் இணைந்து பாடுவதற்காக பாபியும் மேடைக்குச் சென்றார்.

சிறிது நேரம் கழித்து அந்தப் பாடகர்கள் ஒய்வு எடுக்க விரும்பினர். ஆனால் பாபி தொடர்ந்து பாடிக்கொண்டிருந்தார். அதனால், கோபமடைந்த பாடகர்கள் பாபியை இரண்டு முறை கத்தியால் நெஞ்சில் குத்தியுள்ளனர். பாபி அங்கேயே இறந்துவிட்டார்.

இதனைத் தடுக்க முயன்ற அவரது மகன் ஆடமுக்கு கையில் கத்திக்குத்து விழுந்துள்ளது. காவல்துறையினர் மூன்று பாடகர்களையும் கைது செய்துள்ளனர்.

பாபியும், அவரது மகனும் விடுதியின் பாடகர்களிடம் பிரச்சினை செய்ததாகவும், பின்னர் பாபி இனாமாக அளித்த பணத்தைத் திரும்பக் கேட்டதால் சண்டை ஏற்பட்டுள்ளதாகவும் சுற்றுலா காவல்துறையைச் சேர்ந்த லெப்டினென்ட் கர்னல் அட்டபோங் சீன்ஜைவுத் தெரிவித்தார்.

விடுதிக்கு வெளியே வந்த பின்னரே இரு பிரிவினருக்கும் கைகலப்பு ஏற்பட்டதாகவும், கத்திக்குத்து பட்ட பாபி மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் இறந்தார் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாய்லாந்து நாட்டின் பொருளாதாரம் பெரும்பாலும் அதன் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளையே சார்ந்துள்ளது.

இந்த நிலையில் வெளிநாட்டுப் பயணிகள் நடத்தப்படும் விதம் இப்போது சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. சென்ற வருடம் மட்டும் தாய்லாந்திற்கு வந்த வெளிநாட்டுப் பயணிகளின் எண்ணிக்கை 22 மில்லியன் ஆகும்.

இவர்களில் பெரும்பான்மையானோர் எந்தவித பிரச்சினைகளையும் எதிர்நோக்கவில்லை. எனினும், இவர்களது பாதுகாப்பு குறித்த நடவடிக்கைகள் தீவிரமாக்கப்படவேண்டும் என்றே அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அமெரிக்காவை விட வேகமாக முன்னேறும் இந்தியா, ஜெர்மனி, சீனா: அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா..!!
Next post தனுஷின் இயக்கத்தில் நடிக்க விரும்பும் அபிஷேக் பச்சன்..!!