உயர்தரப் பரீட்சையில் சித்தியடையச் செய்யக்கோரி விடைத்தாளுடன் 15.000 ரூபாவை இணைத்துக் கொடுத்த மாணவன்..!

Read Time:2 Minute, 7 Second

images (5)

2012 ஆம் ஆண்டு க.பொ.த உயர்­தரப் பரீட்­சைக்கு தோற்­றிய மாண­வ­ரொ­ருவர் தன்னை சித்­தி­பெற வைக்­ கும்­படி கோரி 15,000 ரூபா­வுக்­கான நோட்­டு­களை தனது விடைத்­தாளுடன் இணைத்து அனுப்­பி­யி­ருந் ­த­தாக பரீட்­சைகள் ஆணை­யாளர் நாயகம் தெரி­வித்தார்.

தமிழ்மொழி மூலம் பரீட்­சைக் குத் தோற்­றிய மாணவர் தமது சிர­மங்­களை சுருக்­க­மாக எழு­திய கடி ­தத்­துடன் மூன்று 5,000 ரூபா நோட்­டு­களை இணைத்­தி­ருந்­த­தாக

பத்­த­ர­முல்­லை­யி­லுள்ள பரீட்­சைகள் திணைக்­க­ளத்தில் நேற்று முன்­தினம் நடை­பெற்ற செய்­தி­யாளர் மாநாட்டில் பரீட்­சைகள் ஆணை­யாளர் டபிள்யூ. எம்.என்.ஜே.புஷ்­ப­கு­மார தெரி­வித்தார்.

இது போன்ற முறை­யற்ற வழி­களை பின்­பற்­று­வது பரீட்சை சட்ட திட்­டங்­களை மீறு­வ­தாகும் எனவும் இது போன்ற பரீட்­சார்த்­திகள் பரீட்­சைகள் திணைக்­க­ளத்­துக்கு அழைக்­கப்­பட்டு இது குறித்து விசா­ர­ணைகள்  நடத்­தப்­ப­ட­வுள்­ள­தா­கவும் அவர் தெரி­வித்தார்.

அந்த மாணவர் விடைத்­தா­ளுடன் இணைத்­தி­ருந்த 15,000ரூபா அரச கணக்கில் வைப்­பி­லி­டப்­பட்­ட­தா­கவும் ஆணை­யாளர் தெரி­வித்தார்.

விடைத்­தா­ளுடன் தனது துய­ரங்­களை எழு­துதல், பண நோட்­டு­களை இணைத்தல், தொலை­பேசி இலக்­கங்­களை எழு­துதல் போன்ற செயல்­களால் எது­வித நன்­மை­களும் கிடைக்கப்போவதில்லையெனவும் இது காலத்தையும் பணத்தையும் விரயமாக்கும் செயலாகவே அமையுமென்றும் அவர் தெரிவித்தார்.”

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிறு­மியை கடத்தித் துஷ்­பி­ர­யோ­கம் செய்த விடயமாக இளைஞர் கைது..!
Next post மாற்றுத் திறனாளிகளுக்கான உலக மெய்வல்லுநர் போட்டிகளில் இலங்கைக்கு வெண்கலம்..!