சுப்பர்மேனும் பெட்மேனும் இணைந்து தோன்றும் படம்..!!

Read Time:4 Minute, 17 Second

1382bad1சுப்­பர்மேன், பெட்மேன்  கதா­பாத்­தி­ரங்கள் இணைந்து தோன்றும் திரைப்­ப­ட­மொன்று தயா­ரிக்­கப்­ப­ட­வுள்­ள­தாக ஹொலிவூட் திரைப்­பட தயா­ரிப்பு நிறு­வ­ன­மான வார்ணர் பிரதர்ஸ் நிறு­வனம் அறி­வித்­துள்­ளது.

சாகச ஹீரோக்­க­ளான சுப்­பர்மேன், பெட்மேன், ஸ்பைடர்மேன் போன்ற திரைப்­படத் தொடர்கள் உல­கெங்கும் பெரும் வெற்றி பெற்­றவை.

ஆனால் முதல் தட­வை­யாக சுப்பர் மேனும் பெட்­மேனும் ஒரே படத்தில் தோன்­ற­வுள்­ளனர். அமெ­ரிக்­காவின் சான்­டி­யகோ நகரில் நடை­பெற்ற விழா­வொன்றில் இத்­தி­ரைப்­படம் குறித்த உத்­தி­யோ­கபூர்வ அறி­விப்பு வெளி­யா­கி­யது.

இறு­தி­யாக கடந்த மாதம் வெளி­யான சுப்பர்மேன் திரைப்­ப­ட­மான மேன் ஒவ் ஸ்டீல் திரைப்­ப­டத்தின் இயக்­குநர் ஸாக் ஸ்னைடர்தான் பெட்மேன், சுப்­பர்பேன் இணைந்து தோன்றும் படத்­தையும் இயக்­க­வுள்ளார்.

இப்­ப­டத்தின் முதற்­கட்ட வேலை கள் ஏற்­கெ­னவே ஆரம்­ப­மா­கி­விட்­ட­தா­கவும் அடுத்த வருட முற்­ப­கு­தியில் படப்­பி­டிப்பு ஆரம்­ப­மாகும் எனவும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. 2015 ஆம் ஆண்டு இப்­ப­டத்தை திரை­யி­டு­வ­தற்கு திட்­ட­மி­டப்­பட்­டுள்­ளது.

மேன் ஒவ் ஸ்டீல் படத்தில் சுப்­பர்மேன் நடித்த பிரித்­தா­னிய நடிகர் ஹென்றி கெவில் புதிய படத்­திலும் சுப்­பர்மேன் வேடத்தில் நடிக்­க­வுள்ளார். ஆனால், இப்­ப­டத்தில் பெட் மேன் வேடத்தில் நடிக்­கப்­போ­வது யார் என கேள்வி எழுந்­துள்­ளது.

ஏனெனில் இறு­தி­யாக 2012 ஆம் ஆண்டு வெளி­யான ‘பெட்மேன்’ திரைப்­ப­ட­மான  ‘த டார்க் நைட் ரைசஸ்’ படத்தில் பெட்மேன் வேடத்தில் நடித்த கிறிஸ்­டியன் பேல், தான் தொடர்ந்தும் அந்த வேடத்தில் நடிக்க விரும்­ப­வில்லை எனத் தெரி­வித்­துள்ளார்.

மேன் ஒவ் ஸ்டீல் எனும் சுப்­பர்மேன் திரைப்­ப­டத்தின் திரைக்­கதை ஆசி­ரி­ய­ரான டேவிட் எஸ். கோயர்தான் சுப்­பர்மேன் பெட்மேன் தோன்றும் புதிய படத்­திற்கும் திரைக்­கதை ஆசி­ரியர். ‘த டார்க் நைட் ரைசஸ் படத்­திற்கும் இணை திரைக்­கதை ஆசி­ரி­ய­ராக பணி­யாற்­றி­யவர் இவர்.

புதிய படத்­திற்கு ‘பெட் மேன் ஏள சுப்­பர்மேன் அல்­லது சுப்பர் மேன் ஏள பெட்மேன்’ என பெய­ரி­டப்­ப­டலாம் என டேவிட் எஸ்.கோயர் கூறி­யுள்ளார்.

சுப்­பர்மேன், பெட்மேன் பாத்­தி­ரங்கள் பல தசாப்­தங்­க­ளுக்கு முன்­னரே சித்­தி­ரக்­கதைத் தொடர்­க­ளாக வெளி­யாகி புகழ்­பெற்­றவை. 1954 ஆம் ஆண்டு வெளி­யான சித்­தி­ர­கதைத் தொட­ரொன்றில் பெட்மேன், சுப்பர்மேன் பாத்­தி­ரங்கள் முதல் தட­வை­யாக இணைந்து செயற்­ப­டு­வ­தாக சித்­த­ரிக்க­ப்­பட்­டி­ருந்­தது.

இரு­வரும் நண்­பர்­க­ளாக அக்­க­தையில் தோன்­றினர். அக்­க­தைக்கு ‘வேர்ல்ட்ஸ் பைன்ஸ்ட்’ எனப் பெய­ரி­டப்­பட்­டி­ருந்­தது. இந்­நி­லையில் புதிய படத்­துக்கும் இந்த பெயர் சூட்­டப்­ப­டு­வ­தற்­கான  வாய்ப்பும் உள்ளதாக கூறப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கட்டுப்பணம் செலுத்த இறுதி நேரம் வரை காத்திருக்க வேண்டாம்; தேர்தல் செயலகம்..!!
Next post இத்தாலி பஸ் விபத்தில் 30 பேர் உயிரிழப்பு..!!