16 வயது சிறுமியை 58முறை குத்திக் கொன்று, பிணத்துடன் உறவு கொண்ட கொடூரன்..!!

Read Time:2 Minute, 25 Second

30-killerstabsgirl-500-jpgஇங்கிலாந்தில் ஒரு கொடூர சம்பவம் நடந்துள்ளது. ஒரு 16 வயது சிறுமியை சரமாரியாக குத்திக் கொன்ற 23 வயது இளைஞர் அந்தப் பெண்ணின் பிணத்துடன் உறவு கொண்டு மிகவும் மோசமாக நடந்துகொண்டுள்ளார்.

லண்டன், பிளாக்பூல் பகுதியைச் சேர்ந்தவர் 16 வயதான சாஷா மார்ஸ்டன். இவர்தான் இந்தக் கொடுமைக்குள்ளாகி பரிதாபமாக உயிரைப் பறி கொடுத்துள்ளார்.

குற்றவாளியின் பெயர் டேவிட் மின்டோ. 23 வயதான இந்த நபர், பேஸ்புக் மூலம் சாஷாவிடம் நட்பாகியுள்ளார். பின்னர் உனக்கு எனது தோழியின் ஹோட்டலில் நல்ல வேலை பார்த்துத் தருகிறேன் என்று அழைத்தார்.

அதை நம்பி சாஷாவும் கிளம்பி வந்துள்ளார். வந்த சிறுமியை ஹோட்டலுக்குக் கூட்டிப் போனார் டேவிட். அங்கு வைத்து பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்தார். ஆனால் சாஷா அனுமதிக்கவில்லை.

இதையடுத்து கத்தியை எடுத்து சாஷாவை குத்த ஆரம்பித்தார். சாதாரணமா இல்லை, தலையில் மட்டும் 58 முறை கொடூரமாக குத்தினார்.

இதில் சாஷா உயிரிழந்தார்.அதன் பின்னர் தனது வெறி அடங்காமல், சாஷாவின் இறந்த உடலுடன் உறவு கொண்டார். பின்னர் சாஷாவின் உடலில் தீவைத்தார். அதில் சாஷாவின் உடல் பாதி எரிந்து போனது.

அதன் பின்னர் எரிந்த உடலை ஒரு பெரிய துணியில் கட்டி பார்சலாக்கி, கிராப்டன் ஹோட்டல் அருகே போட்டு விட்டார்.அதன் பின்னர் போலீஸார் வந்து விசாரணை நடத்தி டேவிட்டைக் கைது செய்தனர்.

தற்போது விசாரணை முடிந்து டேவிட்டுக்கு ஆயுள் தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது அவர் சிறையில் கிட்டத்தட்ட 35 வருடங்களைக் கழிக்க வேண்டியிருக்கும் என்று கூறப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உதவி செய்தவரை கெட்ட வார்த்தைகளால் திட்டித் தீர்த்த கிளி..!!
Next post கருப்பின பெண் அமைச்சர் மீது வாழைப்பழ வீச்சு..!!