47 வயது இளமைப் பெண் சத்திரசிகிச்சை மூலம் வயதான தோற்றத்தை அடைய ஆவல்..!!
நம்மில் பலருக்கும் 30 வயதாகும் போதே வயதாவதற்குரிய அறிகுறிகள் அத்தனையும் ஆரம்பித்துவிடும். இளமையாக தோன்றுவதற்கு பலர் எத்தனையோ முயற்சிகளை மேற்கொள்கின்றனர்.
ஆனால், இங்கிலாந்தைச் சேர்ந்த ஆன் போல்டன் பாட்டியாகிவிட்ட நிலையிலும் கூட சத்திர சிகிச்சைகள் எதுவுமின்றி தொடர்ந்தும் இயற்கையாகவே இளமை மாறாது உள்ளார்.
இருப்பினும் 47 வயதிலும் மிக இளமையான தோற்றத்தில் இருப்பதால் வாழ்க்கையில் பல இழப்புக்கள் ஏற்படுவதாக அவர் கூறுகிறார்.. எனவே தான் வயதானவராக தோற்றளிப்பதற்காக முகத்தில் சுருக்கங்களை ஏற்படும் வகையில் சத்திரசிகிச்சைகளை மேற்கொள்ள விரும்புவதாக போல்டன் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தின் பிரிஸ்டல் நகரில் வசிக்கும் இப்பெண் 4 பிள்ளைகளின் தாயாவார். இவரது மூத்த மகனுக்கு அண்மையில் குழுந்தை ஒன்று பிறந்து பாட்டிமாகிவிட்டார் ஆன் போல்டன்.
இன்னும் இளமையாக இருக்கும் 47 வயதான போல்டன், 20 இளம் மங்கை போலவே தோற்றமளிக்கின்றார். ஆனால் அதை வரமாக கருதாமல் தொல்லையாகவே அவர் கருதுகிறார்.
தனது இளமைத்தோற்றம் காரணமாக கணவரும், காதலர்களும் தன்னைவிட்டு பிரிந்துவிட்டதாக அவர் கூறுகிறார்.
ஆன் போல்டன் தனது24 வயதில் முதல் தடவையாக திருமணம் செய்துகொண்டார். அவருடைய இளமை காரணமாக அடுத்த சில வருடங்களிலேயே போல்டனின் திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது.
இது குறித்து அவர் கூறுகையில், ‘திருமணமாகிய சில வருடங்களின் பின்னர் நான் இளமையாகவே இருக்க எனது கணவர் வயதானவராக தெரிந்தார். ஆனால் எங்கள் இருவருக்கும் ஒரே வயதுதான்.
இதனால் நான் வயதானவராக தோற்றமளிக்கும் ஆடைகளையே அணிந்தேன். இருந்தும் எங்களது திருமண வாழ்க்கை முடிந்துவிட்டது’ என்றார்.
இவர்களுக்கு ஆர்தர் (தற்போது 25 வயது), கெவின் (தற்போது 19 வயது) குழந்தைகள் பிறந்துள்ளன.
இதன் பின்னரும் போல்டன் மற்றுமொருவருடன் திருமணம் செய்யாது குடும்பம் நடத்தியுள்ளார். இதன்போது மேலும் இரண்டு குழந்தைகளுக்கு தாயாகியுள்ளார். ஆனால் இக்குடும்ப வாழ்க்கையும் நீண்ட காலம் நீடிக்கவில்லை. இப்பிரிவுக்கும் காரணம் போல்டனின் இளமையே.
இனி காதல் கொள்வதில்லை என்றிருந்த போல்டனின் வாழ்க்கையில் அவருக்கு 32 வயதாக இருக்கும் போது 42 வயதான ஆணொருவர் மீண்டும் நுழைந்துள்ளார். இவர் ஆரம்பத்தில் போல்டனின் இளமை பற்றி கவலை கொள்ளவில்லை. பின்னர் இவருக்கும் போல்டனின் இளமை பிரச்சினையாக அமைய போல்டனைவிட்டு பிரிந்துள்ளார்.
இந்த காதல் குறித்து போல்டன் கூறுகையில், நானும் எனது கடைசி வாழ்க்கைத் துணையும் இணைந்திருந்தால் பார்ப்பவர்களால் எனது கணவராக அவரை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதனால் அவரை அசிங்கமான கிழவன் என்று கூட அழைத்திருக்கிறார்கள். எனவே மீண்டும் பழைய வாழ்க்கைக் திரும்பவேண்டியதாயிற்று.
எல்லோரும் இளமையாக இருக்க விரும் புவார்கள் ஆனால் எனது வாழ்க்கையில் இழப்புக்களை ஏற்படுத்திய இந்த இளமை தோற்றத்திலிருந்து விடுபட்டு வய தான தோற்றத்தை பெற சத்திரசிகிச்சை மேற்கொள்ள விரும்புகிறேன். இதனை வேடிக்கையாக கூறவில்லை’ எனத் போல் டன் தெரிவித்துள்ளார்.
Average Rating