இங்கிலாந்தில் உருவாக்கப்படும் பூங்காப் பாலம்..!!

Read Time:2 Minute, 33 Second

1386123இங்­கி­லாந்தின் தேம்ஸ் நதிக்கு குறுக்­காக பாத­சா­ரி­க­ளுக்­கென பூங்காவுடன் கூடிய தொங்கும் பால­மொன்று உரு­வாக்­கப்­ப­ட­வுள்­ளது.

2012 ஆம் ஆண்டு லண்­டனில் இடம்­பெற்ற ஒலிம்பிக் ஆரம்ப வைபத்­தின்­போது அனை­வ­ரையும் கவரும் வகையில் இரும்­பி­லான பெரிய தீச்­சட்­டியை உரு­வாக்­கிய தோமஸ் ஹீதர்விக் என்­பரே இத்­திட்­டத்­தினை உரு­வாக்­கி­யுள்ளார்.

இங்­கி­லாந்தின் 2 ஆவது மிகப் பெ­ரிய நதி­யான தேம்ஸ் நதியின் குறுக்கே வடக்கு மற்றும் தென் இங்கிலாந்தை இணைக்கும் இப்பூங்கா தொங்கு பாலம் 60 மில்­லியன் ஸ்டேர்லிங் பவுண்டில் அமைக்­கப்­ப­ட­வுள்­ளது.

இத்­திட்­டத்­திற்கு செல­வு­செய்­யப்­ப­ட­வுள்ள பணத்­தினை ஹீதர்­விக்­கினால் தனி­யாட்­க­ளி­ட­மி­ருந்து திரட்­ட­ம
டிந்தால் மக்­களின் பணம் இதில் பயன்­ப­டுத்­த­ப்படமாட்டாது எனத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

அருப் எனப்­படும் பொறி­யி­ய­லா­ளர்கள் நிறு­வ­னத்­துடன் இணைந்து உரு­வாக்­கப்­ப­ட­வுள்ள இப்­பா­லத்­தை 2016ஆம் ஆண்டில் திறந்து வைக்க எதிர்­பார்க்­கப்­பட்­டுள்­ளது.

மேலும் இப்­ப­hலத்­துடன் சேர்ந்து துவிச்­சக்­க­ர­வண்டி செலுத்தும் பாதையும் உரு­வாக்­கப்­ப­டலாம் எனவும் கூறப்­ப­டு­கின்­றது.

லண்­டனில் அழகை ரசிக்கு­மி­ட­மாக அமை­ய­வுள்ள இப்­பா­லத்தில் மரங்கள் மற்றும் பூம­ரங்கள் என மிக அழ­கா­கவும் அமை­தி­யான ரசிக்கும் இட­மா­கவும் உரு­வாக்­கப்­ப­ட­வுள்­ளதாம்.

இந்த பூங்கா தொங்கு பாலத் திட்­டத்­திற்கு ஆத­ர­வ­ளித்­துள்ள நடிகை ஜோனா லும்லி கூறுகையில், இப்பாலம் லண்டன் வாசிகளுக்கும் இங்கு வருபவர்களுக்கும் அமைதியையும் அழகையும் தரும் என தான் நம்புவதாக தெரிவித்துள்ளார்.

1386thoms

1386123

1386342

 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நான்கு சிறு­மி­களை துஷ்­பி­ர­யோகம் செய்தவர்கள் கைது..!!
Next post பொதுமக்கள்மீது தாக்குதல் நடத்திய ஐவர் யாழில் கைது..!