கங்ணம் ஸ்டைல் பாடகரின் போலி குதிரை சவாரி..!!

Read Time:2 Minute, 53 Second

1371_newsthumb_psyதென்­கொ­ரிய பாட­க­ரான ஷையின் ‘கங்ணம் ஸ்டைல்’ பாடல் உல­க­ளா­விய ரீதியில் பிர­சித்தி பெற்­ற­மைக்கு அப்­பா­டலில் ஷை ஆடிய ‘குதிரை நடனம்’ முக்­கிய காரணம்.

இப்­போது அவர் குதி­ரை­யொன்றில் பய­ணிப்­ப­துபோல் விளம்­ப­ர­மொன்று தயா­ரிக்­கப்­பட்­டுள்­ளது. இவ்­விளம்பரப் படப்­பி­டிப்பு அமெ­ரிக்­காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் அண்­மையில் நடை­பெற்­றது.

ஆனால், கங்ணம் ஸ்டைலில் பாடலில் குதிரை போன்று நட­னமா­டிய பாடகர் ஷை, இவ்­வி­ளம்­பரப் படப்­பி­டிப்பில் உண்­மை­யான குதி­ரைக்குப் பதி­லாக போலி குதி­ரை­யொன்றில் அமர்ந்­தி­ருந்த நிலை­யி­லேயே படப்­பி­டிப்பு நடத்­தப்­பட்­டது.

35 வய­தான பாடகர் ஷையின் உண்­மை­யான பெயர் பார்க் ஜே சாங் ஆகும். பல வரு­டங்­க­ளாக அவர் தென் கொரி­யாவில் பிர­ப­ல­மான பாட­க­ராக விளங்­கு­கிறார். ஆனால் 2012 ஆம் ஆண்டு ஜூலை மாதம் அவர் வெளி­யிட்ட கங்ணம் ஸ்டைல் பாடல் உலகம் முழு­வதும் அவரின் புகழை பரவச் செய்­தது.

அந்த பாடல் யூரியூப் இணை­யத்­த­ளத்தில் வெளி­யா­ன­வுடன் ஒரே நாளில் உலகப் புகழ்­பெற்ற நட்­சத்­தி­ர­மானார் ஷை. அப் பாடல் வீடியோ யூரியூப் இணை­யத்­த­ளத்தில் 170 கோடிக்கும் அதி­க­மான தடவை பார்­வை­யி­டப்­பட்டு சாதனை படைத்­துள்­ளது.

கடந்த ஏப்ரல் மாதம் ‘ஜென்­டில்மேன்’ என புதிய பாடல் ஒன்­றையும்  குறிப்­பி­டத்­தக்­கது.

இணை­யத்­த­ளங்­களில் அதி­க­மாக பார்­வை­யி­டப்­பட்ட வீடியோ, அதி­க­மாக ‘லைக்’ செய்­யப்­பட்ட வீடியோ, யூரியூப் இணை­யத்­த­ளத்தில் 100 கோடி தடவை பார்­வை­யி­டப்­பட்ட முதல் வீடியோ, 24 மணித்­தி­யா­லங்­களில் அதி­க­மாக பார்­வை­யி­டப்­பட்ட வீடியோ என பல சாத­னை­களை ‘கங்ணம் ஸ்டைல்’ வீடியோ படைத்­தது.

மேற்­கு­லக இசைத் தொழிற்­து­றையில் வர்த்­தக ரீதியில் வெற்றி பெற்ற முதல் கொரிய பொப் கலைஞராக பாடகர் ஷை விளங்குகிறார். ஆனால், எதிர்காலத்தில் இன்னும் பல ‘ஷை’ களை கொரிய பொப் கலைத்துறை உருவாக்கும் என்கிறார் ஷை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கடற்கரையில் கூதுகலத்தில் இருக்கும் ஸ்ரீலங்கன் பீச் கேர்ல்ஸ் …!(PHOTOS)
Next post இங்கிலாந்தில் 200 அடி உயர மலையிலிருந்து உருளும் ‘த்ரில்லிங்’ போட்டி..!!