மலேசியா: ரம்ஜான் நோன்பு எதிரொலி: மாணவர்களை குளியலறையில் சாப்பிட உத்தரவிட்ட பள்ளி நிர்வாகம்..!!

Read Time:1 Minute, 58 Second

24-canteen-600-jpgமலேசியாவில் ஒரு பள்ளி நிர்வாகம், தற்போது ரம்ஜான் நோன்புக் காலம் என்பதால் முஸ்லீம் அல்லாத மாணவர்களை பள்ளியின் குளியலறையில் சாப்பிட உத்தரவிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சுங்காய் புலோ என்ற இத்தில் உள்ள செரி பிரஸ்தினா பள்ளியில்தான் இது நடந்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்தி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த நாட்டு கல்வித்துறை அமைச்சர் கமலநாதன் தெரிவித்துள்ளார்.

மாணவ, மாணவியர் பள்ளிக்கூட குளியலறையில் உட்கார்ந்து சாப்பிடுவது போன்ற புகைப்படங்கள் இணையதளங்களிலும், பேஸ்புக், டிவிட்டர் போன்றவற்றிலும் வெளியாகியுள்ளது.

ரம்ஜான் மாதம் என்பதால், நோன்பு இருக்கும் முஸ்லீம் மாணவர்களுக்கு இடையூறாக இருக்கக் கூடாது என்பதால் இவ்வாறு குளியலறையில் உட்கார்ந்து சாப்பிடுமாறு முஸ்லீம் அல்லாத மாணவ மாணவியரை பள்ளி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளதாக தெரிகிறது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள கல்வித்துறை அமைச்சர் கமலநாதன், இது பெரும் ஏமாற்றமாக இருக்கிறது. இதுகுறித்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளேன்.

சம்பந்தப்பட்டவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். எதிர்காலத்தில் இதுபோலநடக்காமல் பார்த்துக் கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார்.

24-canteen-600-jpg

24-canteen213-600-jpg

 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சந்தோஷ வெள்ளத்தில் மூழ்கியுள்ள இலங்கைத் தமிழ்க் குடும்பம்..!!
Next post தனது உடலை இரண்டாக வெட்டி வீதியில் நடந்த மெஜிக் கலைஞர்..!!(VIEDO)