2ஆம் உலக யுத்த பீரங்கிகளால் உருவாக்கப்பட்ட ஜிம்..!!

Read Time:2 Minute, 24 Second
20-detroit28-6002ஆம் உலக மகா யுத்­தத்தின் போது பயன்­ப­டுத்­தப்­பட்ட பீரங்­கி­க­ளி­லி­ருந்து ஜிம் உப­க­ர­ணங்கள் உரு­வாக்­கப்பட்டு அத­னைக்­கொண்டு திறந்த வெளி உடற்­ப­யிற்சி நிலையம் (ஜிம்) ஒன்­றினை   உக்­ரைனைச் சேர்ந்த பொறி­யிய­லாளர் ஒருவர் உரு­வாக்­கி­யுள்ளார்.

இல­வ­ச­மாக பயிற்­சிகள் மேற்­கொள்ள அனு­ம­திக்கும்  இந்த உடற்­பி­யற்சி நிலையம் அதுவும் வர­லாற்று முக்­கி­யத்­துவ­மிக்க பொருட்­களை கையாளும் வாய்ப்பு என்றால் அதி­க­ள­விலான மக்­களை உடற்­ப­யிற்­சியின் பக்கம் ஈர்க்­கலாம் எனும் யூரி குக் என்ற பொறி­யி­ய­லா­ளரின் சிந்­த­னை­யி­லேயே இவ்­வா­றா­ன­தொரு ‘ஜிம் ‘அமைக்­கப்­பட்­டுள்­ளது.
உக்­ரைனின் கீவ் நக­ரில் 6.2 சதுர மைல் நிலப்­ப­ரப்­பி­லேயே மேற்­படி திறந்­த­வெளி ஜிம் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது.

இந்த ஜிம்மில் 2ஆம் உலக மகா யுத்­தத்தில் ரஷ்யா பயன்­ப­டுத்­திய பீரங்­கி­யி­லி­ருந்து மாத்­தி­ர­மல்­லாமல் 1970 ஆண்டு காலப்­ப­கு­தியில் பயன்­ப­டுத்தி பாவ­னைக்­கு­த­வாது என விலக்­கப்­பட்ட சாத­னங்கள் பல­வற்­றி­லி­ருந்தும் பஞ்சிங் பேக், இருக்­கைகள் என 200 இற்கும் அதி­க­மான ஜிம் சாத­னங்­களை யூரி குக் உரு­வாக்­கி­யுள்ளார்.

திறந்த வெளியில் உள்­ள­மை­யினால் திருட்­டினைத் தவிர்க்க இரும்­புச்சங்­கி­லி­களால் சாத­னங்கள் கட்­டப்­பட்­டுள்­ளது. இந்­நி­லையில் தன்­னார்வத் தொண்­டர்கள் சிலர் இந்த ஜிம்மை முறை­யாகப் பரா­ம­ரிக்க ஆரம்­பித்­துள்­ள­தாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது இந்த ஜிம்மில் ஏராளமான மக்கள் உடற்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

1296article-0-1AA7E3B6000005DC-993_968x642 1296article-0-1AA7ED71000005DC-803_968x577 1296thum

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post போதைக் கடத்தல் கும்பல் தலைவன், டிரிவினோ மொரேல்ஸ் கைது..!!
Next post தள்ளிப்போகுது தங்க மீன்கள்..!!