ஆமா… நாங்க லவ் பண்றோம்…! உறுதி செய்த சிம்பு-ஹன்சிகா..!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டு இருக்கும் நடிகை ஹன்சிகா, சிம்புவுடன் ‘‘வாலு‘‘, ‘‘வேட்டை மன்னன்’’ படத்தில் நடித்து வருகிறார். நயன்தாராவுடனான காதல் முறிவுக்கு பின்னர் சிம்பு, ஹன்சிகாவை காதலிப்பதாக கூறப்படுகிறது. சில மாதங்களாகவே இந்த செய்தி கோலிவுட்டில் வலம் வந்து கொண்டு இருக்கிறது. ஆனால் இதனை இருவரும் மறுத்து வந்தனர்.
இந்நிலையில் கடந்தவாரம் ஒரு வார இதழுக்கு பேட்டியளித்த சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர், தனது மகன் யாரை காதலித்தாலும் சரி, அது ஹன்சிகாவாக இருந்தாலும் சரி அவரது காதலுக்கு நான் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டேன் என்று கூறியிருந்தார். இந்த செய்தி வெளியான அடுத்த சில நாட்களிலேயே ஹன்சிகா, நான் சிம்புவை காதலிக்கவில்லை, எங்களுக்குள் இருப்பது வெறும் நட்பு மட்டும் தான், என் பெற்றோர் பார்க்கும் மாப்பிள்ளையைத்தான் திருமணம் செய்வேன் என்று கூறியிருந்தார். இதேபோல் சிம்புவும் பலமுறை நான் ஹன்சிகாவை காதலிக்கவில்லை என்று கூறியிருந்தார்.
ஆனால் இப்படி இவர்கள் இருவரும் மாறி மாறி நாங்கள் காதலிக்கவில்லை… காதலிக்கவில்லை… என்று கூறி வந்தவர்கள், இப்போது நாங்கள் காதலிக்கிறோம் என்று கூறியுள்ளனர். சிம்பு தனது டுவிட்டர் பக்கத்தில், ஆமாம் நான் ஹன்சிகா கூடத்தான் இருக்கிறேன். ரொம்ப நல்ல பொண்ணு ஹன்சிகா, நாங்கள் திருமணம் செய்வது பற்றி விரைவில் எங்களது பெற்றோர் முடிவு செய்ய உள்ளனர், எங்களது தனிப்பட்ட சுதந்திரத்திற்கு மதிப்பு கொடுங்கள் என்று கூறியுள்ளார்.
சிம்பு டுவிட் செய்த அடுத்த சில நிமிடங்களில் ஹன்சிகாவும் டுவிட் செய்துள்ளார். அதாவது, எனது சொந்த வாழ்க்கையை பற்றி நிறைய கிசுகிசுக்கள் வெளிவருகின்றன. இப்போது அதை தெளிவுப்படுத்துகிறேன். ஆமாம், நான் சிம்புவை காதலிக்கிறேன். இதற்கு மேல் எனது சொந்த விஷயங்களை நான் பேச முடியாது என்று கூறியுள்ளார்.
ஆக சிம்பு-ஹன்சிகா காதல் உறுதியாகியுள்ளது…!!
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating