இசை நிறுவனங்கள் ‘ராயல்டி’ தருவதில்லை: ஜி.வி.பிரகாஷ் வேதனை..!!

Read Time:2 Minute, 21 Second

download (10)

ஆன்லைன் வளர்ச்சியால் இசை நிறுவனங்கள் வருவாய்க்காக போராடும் நிலை உள்ளது. இசை அமைப்பாளர்களோ பெருகி வரும் தொழில் போட்டியில் மேலே வர தவித்துக் கொண்டிருக்கின்றனர். இரு தரப்பினருக்கும் இடையே இருந்துவரும் பூசல் இணையதளத் தகவல் மூலம் வெளிவந்துள்ளது.

இசை அமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் தனது இணையதளத் தகவலில் சில இசை நிறுவனங்கள் போலியான ஒப்பந்தப் பத்திரங்களில் இசை அமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள் போன்றோரிடம் கையெழுத்துப் பெற்றுக்கொண்டு தகுந்த ராயல்டியைத் தருவதில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார். சக கலைஞர்களும் இந்தப் பிரச்சினையில் தீர்வு காண ஒத்துழைக்க வேண்டும் என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

ராயல்டி தருவதாக இசை நிறுவனங்கள் இசை அமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள் போன்றோரிடம் முன்கூட்டியே ஒப்பந்தத்தில் கையெழுத்துப் பெறுமாறு தயாரிப்பளர்களை வற்புறுத்துகிறார்கள். அவ்வாறு கையெழுத்து போடாத சமயத்தில் தங்களது செக்குகளை நிறுத்தி வைக்கப்படுகிறது. இந்தப் போலியான ஒப்பந்தங்களால் தங்களுக்கு உரிய பணம் கிடைப்பதில்லை. இதனால் வளரும் களைஞர்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

இதுபோல் பாடலாசிரியர் வைரமுத்துவும், பாடல்கள் திரைப்படத்தைத் தவிர வேறு துறைகளில் பயன்படுத்தப்படும்போது தங்களுக்கும் அதற்குரிய பங்கு வழங்கப்படுதல் வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சோனி, டி சீரிஸ், ஜெமினி போன்ற இசை நிறுவனங்கள் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அதிபர் ஆசாத்துக்கு ஆதரவான சிரியா அதிகாரி லெபனானில் சுட்டுக்கொலை..!!
Next post .மலாலா மீதான தாக்குதல் அதிர்ச்சியளிக்கிறது – தலிபான்..!