பொலிவிய ஜனாதிபதியின் விமானம் சோதனையிடப்பட்டமைக்கு தென் அமெரிக்க நாடுகள் கண்டனம்

Read Time:3 Minute, 1 Second

1148_newsthumb_southபொலி­வி­யாவின் ஜனா­தி­பதி ஈவோ மொரலெஸ் பய­ணித்த விமானத்தை ஐரோப்­பிய நாடுகள் பல தமது வான் ­ப­ரப்பில் பறக்கத் தடை விதித்து அவ்விமானத்தை சோதனையிட்டமைக்கு தென் அமெ­ரிக்க நாடுகள் கடும் கண்­டனம் வெளி­யிட்­டுள்­ளன.

பொலி­விய ஜனா­தி­பதி பய­ணித்த விமா­னத்தில், அமெ­ரிக்க பாது­காப்பு நிறு­வனம் தொடர்­பி­லான தக­வல்­களை வெளி­யிட்டு தலை­ம­றை­வாகி இருக்கும் முன்னாள் அமெ­ரிக்க உள­வுத்­துறை அதி­கா­ரி­யான ஸ்னோடன் பய­ணிப்­ப­தாக சந்­தே­கிக்­கப்­பட்டு பொலி­விய ஜனா­தி­பதி பய­ணித்த விமா­னத்­தினை தமது வான்­ப­ரப்பில் பறக்கவிட பல ஐரோப்­பிய நாடுகள் அனு­மதி மறுத்­தன.

இவ்­வி­வ­கா­ர­மா­னது தற்­போது தென் அமெ­ரிக்க நாடு­களில் பெரும் சல­ச­லப்­பினை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. இதனால் இச்­சம்­பவம் தொடர்பில் கலந்­து­ரை­யாட நேற்று வியா­ழக்­கி­ழமை தென் அமெ­ரிக்க கண்­டத்தின் 12 நாடுகள் அடங்­கிய உனசுர் அமைப்பு அவ­ச­ரக்­ கூட்­டத்­தினை கூட்­டி­யது.

பொலி­வி­யாவின் மரி­யா­தைக்கு மட்­டு­மல்­லாது தென் அமெ­ரிக்க கண்­டத்தின் கௌர­வத்­துக்கே அச்­சு­றுத்­த­லாக இருப்­ப­தாகவே இச்­சம்­ப­வத்­தினைப் பார்ப்­ப­தாக தென் அமெ­ரிக்க நாடுகள் தெரி­வித்­துள்­ளன.

மேலும், இச்­சம்ப­வத்தின் எதி­ரொ­லி­யாக பொலி­வி­யாவின் தலை­நகர் லா பாஸி­லுள்ள பிரான்ஸ் தூத­ர­கத்தின் வெளியே ஆர்ப்­பாட்­டங்கள் நடந்­தன. இதில் பிரான்ஸ்க் கொடி, ஐரோப்­பிய ஒன்­றியக் கொடி ஆகி­ய­வற்றை எரித்து மக்கள் தமது எதிர்ப்­பினை வெளி­யிட்­டனர்.

இதே­வேளை, மொர­லெஸை கடத்­து­வ­தற்கு அமெரிக்கா முயற்­சித்­த­தாகவும் இதன் பின்­னரே ஸ்பெய்ன், இத்­தாலி, பிரான்ஸ் மற்றும் போர்த்­துக்கல் ஆகிய நாடுகள் தமது வான் பரப்பில் ஜனா­தி­பதி பய­ணித்த விமானம் பறக்க அனு­ம­திக்­க­வில்லை எனவும் பொலி­வியா கடந்த புதன்கிழமை குற்றஞ் சாட்டியது.

இந்நிலையில், நேற்று பிரான்ஸ் குறித்த சம்பவத்திற்கு மன்னிப்பு கோரியுள்ளது. ஆனால், இவ்விவகாரம் குறித்து அமெரிக்கா கருத்துக் கூற மறுத்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இந்தியாவின் முன்னால் மண்டியிட தேவையில்லை -ராஜீவ் காந்தியை அடித்த விஜேமுனி
Next post மைனர் விலைமாதுவுக்கு பணம் கொடுத்து உறவு வழக்கு: பெர்லுஸ்கோனிக்கு 7 ஆண்டு சிறை