ரஷ்ய ரொக்கெட் ஏவுகையில் வெடிப்பு!!
ஆளில்லா ரஷ்யாவின் ரொக்கெட் ஒன்று 3 செயற்கைகோள்களுடன் கஸகஸ்தானில் வைத்து நேற்று செவ்வாய்க்கிழமை ஏவுகையில் நச்சு எரி வாயுவை வெளியிட்டவாறு வெடித்துச் சிதறியுள்ளது. ரஷ்யாவுக்குச் சொந்தமான ஆளில்லா ரொக்கெட், கஸகஸ்தானில் அமைந்துள்ள ரஷ்ய ரொக்கெட் ஏவுதளத்தில் வைத்து காலை 8.38 மணிக்கு ஏவப்பட்டுள்ளது. இதன் போதே சற்றும் எதிர்பாராத விதமாக ரொக்கெட் வெடித்துள்ளது.
குறித்த ரொக்கெட் வெடித்துச் சிதறியதில் ஏவுதளம் முழுவதும் நெருப்பினால் மூடப்பட்டுள்ளது. இக்காட்சியினை அந்நாட்டு ஊடகமொன்று வெளியிட்டுள்ளது. ஆனால் இவ்விபத்தினால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்து அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. இந்நிலையில் ரொக்கெட் ஏவப்படும் போது பல ஏவுதள பணியாளர்கள் நிலத்தின் கீழுள்ள பதுங்கு அறையில் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை ரஷ்யாவின் ஆரம்பகட்ட மதிப்பீட்டின்படி இந்த விபத்தில் ஏவுதளத்திற்கு பாதிப்புக்களோ அல்லது உயிரிழப்புக்களோ ஏற்படவில்லை என கஸகஸ்தானின் விண்வெளி நிலையம் தெரிவித்துள்ளது. மேற்படி ரொக்கெட் வெடிப்பின் போது உயர்ரக நச்சு எரிபொருள் எரிந்துள்ளமையினால், பைக்கனூர் நகரில் அமைந்துள்ள குறித்த ஏவுதளத்தைச் சுற்றியுள்ள மக்களின் சுகாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் காரணமாக அவர்களை அங்கிருந்து வெளியேற்றும் நடவடிக்கைகளை கஸகஸ்தான் அவசரகால அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். இந்த ரொக்கெட் விபத்தினால் ரஷ்யாவுக்கு சுமார் 200 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை இழப்புக்கள் ஏற்பட்டிருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating