24 சிறுவர்கள்மீதான துஷ்பிரயோகத்தை மறைக்க 450 கோடி ரூபா செலவிட்ட ஜக்ஸன்-பொப்­!!

Read Time:8 Minute, 51 Second

1132thumபிசை சக்­க­ர­வர்த்தி என வர்­ணிக்­கப்­படும் மறைந்த பாடகர் மைக்கல் ஜக்ஸன், குறைந்­த­ பட்சம் 24 சிறு­வர்­களை பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு உட்­ப­டுத்­தி­ய­தா­கவும் இவ்­வி­ட­யத்தை அவர்கள் வெளியே சொல்­லாமல் இருப்­ப­தற்­காக 3.5 கோடி அமெ­ரிக்க டொலர்­களை (சுமார் 450 கோடி இலங்கை ரூபா) செல­விட்­ட­தா­கவும் அதிர்ச்சித் தக­வல்கள் வெளி­யா­கி­யுள்­ளன. 2009 ஆம் ஆண்டு ஜூன் மாதம் தனது 49 ஆவது வயதில் மறைந்­தவர் மைக்கல் ஜக்ஸன். 1993 ஆம் ஆண்டு 2005 ஆம் ஆண்டு அவர் புகழின் உச்­சியில் இருந்த காலத்­தி­லேயே சிறுவர் பாலி யல் துஷ்­பி­ர­யோக குற்­றச்­சாட்­டுக்கள் சுமத்­தப்­பட்­டன. 1993 ஆம் ஆண்டு 13 வய­தான ஜோர்டன் சான்ட்லர் எனும் தனது மகனை மைக்கல் ஜக்ஸன் பாலியல் துஷ்­பி­ர­யோகம் செய்­த­தாக ஈவான்ட் சாண்ட்லர் என்­பவர் குற்றம் சுமத்­தினார்.

பின்னர் அவ­ருக்கு பணம் வழங்கி, இவ்­வி­வ­கா­ரத்தை முடி­வுக்கு கொண்­டு­வந்தார் ஜக்ஸன். பின்னர் கெவின் ஏர்­விஸோ எனும் சிறு­வனை பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு உட்­ப­டுத்­தி­ய­தாக 2005 ஆம் ஆண்டு ஜக்ஸன் மீது வழக்குத் தொடுக்­கப்­பட்­டது. அவ்­வ­ழக்­கி­லி­ருந்து மைக்கல் ஜக்ஸன் விடு­த­லை­யானார். நெவர்லேண்ட் என பெய­ரி­டப்­பட்ட தனது பிர­மாண்ட இல்­லத்­துக்கு அழைக்­கப்­பட்ட எந்த சிறு­வனும் துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு உட்­ப­ட­வில்லை என மைக்கல் ஜக்ஸன் வலி­யு­றுத்­தினார். எனினும், 15 வரு­ட­கா­லத்தில் குறைந்­த­பட்சம் 24 சிறு­வர்­களை அவர் துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு உட்­ப­டுத்­தி­ய­தா­கவும் அவர்­க­ளையும் அவர்­களின் குடும்­பத்­தி­ன­ரையும் மௌன­மாக்­கு­வ­தற்­காக 3.5 கோடி அமெ­ரிக்க டொலர்­களை செல­விட்­டுள்­ளமை அமெ­ரிக்க புல­னாய்வு அமைப்­பான எவ்.பி.ஐ.யின் இர­க­சிய ஆவ­ணங்கள் மூலம் தெரிய வந்­துள்­ள­தாக பிரித்­தா­னிய பத்­தி­ரி­கை­யொன்று தெரி­வித்­துள்­ளது.

எவ்.பி.ஐ.யின் மேற்­படி ஆவ­ணங்­க­ளுக்கு ஊயுனுஊநு ஆது -02463 மற்றும் ஊசு 01046 என பெய­ரி­டப்­பட்­டி­ருந்­தது. எனினும், 2005 ஆம் ஆண்டு மைக்கல் ஜக்­ஸ­னுக்கு எதி­ரான வழக்கு நடை­பெற்­ற­போது வழக்குத் தொடு­நர்­க­ளுக்கு அந்த ஆவ­ணங்கள் வழங்­கப்­பட்­டி­ருக்­க­வில்லை. ஒரு தடவை பிர­ப­ல­மான குழந்தை நட்­சத்­திரம் ஒரு­வரின் அங்­கங்­களை மைக்கல் தொடு­வ­தையும், மற்­றொரு சிறு­வனை துஷ்­பி­ர­யோ­கம்­ செய்­து­கொண்டு அவர் ஆபாசப் படங்­களை பார்த்­துக்­கொண்­டி­ருந்­த­தையும் மற்­ற­வர்கள் கண்­ட­தாக கூறப்­ப­டு­கி­றது. இன்­னொரு சிறு­வனை அவர் துஷ்­பி­ர­யோகம் செய்­யும்­போது அச்­சி­று­வனின் தாய் நடப்­பது எதையும் அறி­யாமல் சில வரி­சை­க­ளுக்கு அப்பால் அமர்ந்து படம் பார்த்­துக்­கொண்­டி­ருந்­தாராம்.

மேற்­படி ஆவ­ணங்கள் 1989 ஆம் ஆண்­ட­ளவில் தனியார் புல­னாய்­வா­ள­ரான அந்­தனி பெலி­கனோ என்­ப­வரால் தொகுக்­கப்­பட்­ட­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. தன்னைப் பற்­றிய தக­வல்கள் வெளி­வ­ராமல் இருப்­பதை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­வ­தற்­காக மைக்கல் ஜக்­ஸனால் பணிக்கு அமர்த்­தப்­பட்­ட­வர்தான் அந்­தனி பெலி­கனோ. மைக்கல் ஜக்­ஸ­னுடன் தொடர்­பில்­லாத வேறொரு வழக்கில் கப்பம் வசூ­லித்தல், தொலை­பேசி உரை­யா­டல்­களை பதி­வு­செய்தல் போன்ற குற்­றச்­சாட்­டு­க­ளுக்­காக 15 வரு­ட­கால சிறைத்­தண்­டனை விதிக்கப்­பட்டு தற்­போது சிறையில் அடைக்­கப்­பட்­டுள்ளார் அந்­தனி பெலி­கனோ. அவரின் முன்னாள் உத­வி­யாளர் ஒரு­வர்தான் மேற்­படி இர­க­சிய ஆவ­ணங்கள் குறித்த தக­வலை த சண்டே பீப்பள் எனும் பிரித்­தா­னிய பத்­தி­ரி­கை­யிடம் தெரி­வித்­துள்ளார். மைக்கல் ஜக்ஸன் துஷ்­பி­ர­யோ­கப்­ப­டுத்­தி­ய­தாக கூறப்­படும் சிறு­வர்­களில் 17 பேரை அந்­தனி பெலி­கனோ அடை­யா­ளப்­ப­டுத்­தி­யுள்ளார். அவர்­களில் திரைப்­பட, தொலைக்­காட்சி குழந்தை நட்­சத்­தி­ரங்கள் ஐவர், நடனக் கலை­ஞர்கள் இருவர் ஆகி­யோரும் அடங்­கு­கின்­றனர்.

ஏனைய சிறு­வர்­களில் ஐரோப்­பாவை சேர்ந்த சிறு­வ­னொ­ருவன், திரைக்­கதை எழுத்­தாளர் ஒரு­வரின் மகன்கள் ஆகி­யோரும் அடங்­கு­கின்­றனர். துஷ்­பி­ர­யோ­கங்கள் குறித்த தக­வல்­களை கசிய விடாமல் இருப்­ப­தற்­காக குறைந்­த­பட்சம் 3 சிறு­வர்­களின் குடும்­பத்­தி­ன­ருக்கு மைக்கல் ஜக்ஸன் பணம் வழங்­கி­ய­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. மைக்கல் ஜக்­ஸ­னுடன் நட்­பாக இருந்த 13 வய­தான பாட­க­ரான ஜோர்டன் சான்ட்­ல­ருக்கு வழங்­கப்­பட்ட 2 கோடி டொலர் டொலர்­களும் மேற்­படி 3.5 கோடி டொலர் தொகையில் அடங்கும். மற்­றொரு பிர­ப­ல­மான குழந்தை நட்­சத்­திரம் ஒரு­வரின் குடும்­பத்­தினர் ஊட­கங்கள், நூல் வெளி­யீட்­டா­ளர்­க­ளுடன் தொடர்பு கொள்­வதற்கு 6 இலட்சம் அமெ­ரிக்க டொலர்கள் வழங்­கப்­பட்­டதாம். தனது இளம் வயதில் தன்னை மைக்கல் ஜக்ஸன் துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு உட்­ப­டுத்­தி­ய­தாக அவுஸ்­தி­ரே­லிய நடனக் கலைஞர் வாட் ரொப்ஸன் அண்­மையில் வழக்குத் தொடுத்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

இவ்­வ­ழக்கு தொடுக்­கப்­பட்ட சில நாட்­க­ளின்பின் சிறுவர் துஷ்­பி­ர­யோ­கத்தை மறைப்­ப­தற்கு மைக்கல் ஜக்ஸன் பணம் வழங்­கி­யமை குறித்து தகவல் வெளி­யா­னது. தற்­போது 30 வய­தான வாட் ரொப்ஸன், தனது 7 வயது முதல் 14 வய­து­வரை மைக்கல் ஜக்­ஸனால் துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு உட்­பட்­ட­தாக தெரி­வித்­துள்ளார். ஆனால், பல வரு­டங்­க­ளுக்கு முன்னர் நடை­பெற்ற மைக்கல் ஜக்­ஸ­னுக்கு எதி­ரான வழக்கில் மைக்கல் ஜக்­ஸ­னுக்கு ஆத­ர­வாக சாட்­சி­ய­ம­ளித்­தவர் வாட் ரொப்ஸன் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. மைக்கல் ஜக்ஸன் மர­ணத்தின் பின்­னரும் அவர் தொடர்பான சர்ச்சைகள் குறைந்துவிடவில்லை. மைக்கல் ஜக்ஸனின் மரணத்துக்கு 400 கோடி டொலர் (சுமார் 50,000 கோடி ரூபா) நஷ்ட ஈடு கோரி ஏ.ஈ.ஜி எனும் நிறுவனத்துக்கு எதிராக ஜக்ஸனின் தாயார் மற்றும் குடும்பத்தினர் வழக்குத் தொடுத்துள்ளனர்.

அதேவேளை, மைக்கல் ஜக்ஸன் குறித்தும் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அவரின் 3 பிள்ளைகளில் மூத்தவர்கள் இருவரும் வேறு நபரின் உயிரணுக்கள் மூலம் பிறந்தவர்கள் எனக் கூறப்படுகிறது. அதேவேளை அவரின் 15 வயது மகளான பரிஸ் ஜக்ஸன், அண்மையில் தற்கொலைக்கு முயன்றமை குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விளையாட்டு விபரீதமானது: 2 வயது தங்கையைச் சுட்டுக் கொன்ற 5 வயது அண்ணன்!!
Next post சிலைக்குள் என்னப்பா சில்மிஷம் ?? (வீடியோ)