விமான நிலைய அதிகாரிகள் வழமைக்கு மாறாகத் தாமதப்படுத்தி சோதனை நடத்தியதானது… சு.ப.

Read Time:1 Minute, 54 Second

LTTE.SP.tamil1.jpgஇலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான போர்நிறுத்த ஒப்பந்தத்தைக் கண்காணிக்கும் சர்வதேச கண்காணிப்பு குழுவினரின் எதிர்காலச் செயற்பாடுகள் குறித்து ஆராய்வதற்காக ஒஸ்லோ நகரில் கூடிய ஸ்கண்டிநேவிய நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளின கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக நோர்வே சென்றிருந்த விடுதலைப் புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் தலைமையிலான புலிகளின் உயர்மட்டக் குழுவினர் கிளிநொச்சி திரும்பியதாக புலிகளின் ஊடகத்துறை இணைப்பு அலுவலகம் அறிவித்துள்ளது.

கொழும்பிலிருந்து இவர்கள் இலங்கை அரசுக்குச் சொந்தமான உலங்கு வானு}ர்தியில் கிளிநொச்சியை வந்தடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது கொழும்பில் உள்ள கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கிய இவர்களை விமான நிலைய அதிகாரிகள் வழமைக்கு மாறாகத் தாமதப்படுத்தி சோதனை நடத்தியதாகவும் இது சமாதான முயற்சிகளைப் பாதிக்கச் செய்யும் ஒரு நடவடிக்கையாகவே தாங்கள் கருதுவதாகவும் விடுதலைப் புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் கிளிநொச்சியில் வந்திறங்கியவுடன் செய்தியாளர்களிடம் பேசுகையில் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post புலிகள் மீதான தடையானது அவர்கள் டேபிள் டென்னிஸ் விளையாடுவதற்கல்ல.
Next post இராக்கில் வன்முறைக்கு முழுமையாக முடிவு கட்ட இயலாது -அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்