படங்களில் தனக்கான ஜோடியைத் தேடும் சந்தானம் !!
இவர் இல்லனா படமே இல்ல’ என்று சொல்லும் அளவுக்கு தற்போது வெளியாகும் பெரும்பான்மையான படங்களில் சந்தானம் நடித்து வருகிறார். இன்னும் சொல்லப்போனால் இவரை வைத்துதான் சில படங்கள் ஒரு வாரத்துக்காவது தியேட்டரில் ஓடுகின்றன.
‘சந்தானம்தான் இந்த படத்தோட ஹீரோ. அந்தளவுக்கு காமெடியில பின்னி எடுத்திருக்கிறார்’ என்று அவர் காதுபடவே பலபேர் கமெண்ட் அடிக்கிறார்களாம். இதைக்கேட்டு குளிர்ந்துபோன சந்தானம், அந்த ‘காமெடி’ என்கிற வார்த்தையை மட்டும் மறந்துவிட்டாராம்.
அதனால் இனிமேல் தான் நடிக்கும் படங்களில், தனக்கு ஜோடியாக அழகான நடிகையை நடிக்க வைக்க வேண்டும் என்று கட்டளை போட்டுள்ளாராம். இதன் முதற்கட்டமாக ‘யா யா’ என்ற படத்தில் ‘காதல்’ படத்தில் நடித்து, இப்போது மார்க்கெட் இல்லாத சந்தியாவை தனது ஜோடியாக்கி உள்ளார்.
இருவரும் நாயகன் – நாயகி போன்றே காதல் செய்வதோடு, அவர்களுக்கென ரொமான்ஸ் பாடலும் படத்தில் உள்ளதாம். மேலும், ஹீரோக்கள் ரேஞ்சுக்கு சந்தியாவுக்கு முத்தம் கொடுப்பது, இடுப்பைக் கிள்ளுவது போன்ற சில்மிஷ விளையாட்டுகளையும் செய்துள்ளாராம் சந்தானம்.
இதே படத்தில் நடித்துள்ள சிவா, தன்ஷிகா போன்றே சந்தானம் – சந்தியாவின் காதல் லீலைகளும் கிளுகிளுப்பாக படமாக்கப்பட்டுள்ளதாம்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating