கிளிநொச்சி மாவட்ட எதிர்கால தலைமுறையின் படைப்பாற்றலை வெளிக்கொணரும் பாரிய முயற்சி!!

Read Time:3 Minute, 59 Second

exhiகடந்த மூன்று தசாப்தகாலமாக வடபகுதியில் நிலவிய யுத்த சூழ்நிலையால் கிளிநொச்சி மாவட்டத்தின் கல்வித்துறை பாரிய பின்னடைவை எதிர்நோக்கியிருந்தது.

இத்தகைய சூழ்நிலையில் கௌரவ வடமாகாண ஆளுநர் பாதுகாப்பு படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் G.A சந்திரசிறி அவர்களின் சிந்தனையில் பாரிய கல்விக் கண்காட்சியொன்று இம்மாதம் 28 மற்றும் 29 ஆம் திகதிகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர்களின் கல்வித்துறையை மேலும் மேம்படுத்தவும் மாணவர்களிடையே பொதிந்துள்ள பல்துறை சார் படைப்பாற்றலை வெளிக்கொணரவும் முடியும்.

கிளிநொச்சி மாவட்டத்தின் 121 பாடசாலைகள் இதில் பங்களிப்பு செய்கின்றன. அத்துடன் ரோயல் கல்லூரி , ரிச்மன்ட் கல்லூரி , கிங்க்ஸ்வூட் கல்லூரி மற்றும் யாழ்ப்பாணம் மொரட்டுவை ராஜரட்டை பெரதெனிய பல்கலைக்கழகங்களும் தமது வருகையை உறுதிப்படுத்தியுள்ளன. இதனூடாக கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகளுக்கும் இலங்கையின் முன்னணி கல்லூரிகள் பல்கலைக்கழகங்களுக்குமிடையே நட்புறவுப் பாலமொன்று ஏற்படும். மாணவர்களிடையே ஒற்றுமையும் வலுப்பெறும்.

அத்துடன் பாதுகாப்பு படைகளின் தலைமையகம் கிளிநொச்சி மாவட்டத்தில் உதவி தேவைப்படும் மாணவர்களுக்காக 1800 விஷேட புலமைப்பரிசில் திட்டங்களையும் செயற்படுத்தியுள்ளது

இந்த கண்காட்சியானது இருபெரும் பிரிவுகளில் நடைபெறவுள்ளது !

கண்டுபிடிப்பு / ஆக்கத்திறன் சார்ந்த காண்காட்சி

ஆண்டு ஓன்று முதல் ஐந்து வரையான மாணவர்கள் இதில் கலந்துகொள்ளலாம், கண்டுபிடிப்புகள் எந்த துறை சார்ந்ததாகவும் இருக்கலாம், வரையறை கிடையாது.

ஒரு பாடசாலையில் இருந்து குறைந்தது ஐந்து பங்களிப்புகளை எதிர்பார்க்கிறோம்.

ஆண்டு ஆறு முதல் பதினொன்று வரையான மாணவர்கள் தமது பாடத்திட்டத்துடன் சார்ந்த கண்டுபிடிப்புகளை உருவாக்கி காட்சிப்படுத்தலாம். தரம் 12, 13 மாணவர்களுக்கும் வரையறை கிடையாது விருப்பமான துறையில் பொருட்களை காட்சிப்படுத்தலாம்

கலைக் கண்காட்சி

தரம் ஓன்று முதல் ஐந்துவரை கண்காட்சியின் தொனிப்பொருள் தொடர்பில் வரையறை கிடையாது. ஒரு பாடசாலை அதிக பட்சமாக பத்து கலையம்சங்களை காட்சிப்படுத்தலாம்.

தரம் ஆறு முதல் பதினொன்று வரை “எனது எதிர்கால கனவு” (My future dream) எனும் தொனிப்பொருளில் ஆக்கங்களை சமர்பிக்க வேண்டும். அதிகபட்சமாக ஒரு பாடசாலையில் இருந்து பத்து கலையம்சங்களை காட்சிப்படுத்தலாம்.

தரம் 12 to 13 மாணவர்கள் “எனது பார்வையில் ஆசியாவின் அதிசயம்” (Wonder of Asia in my view) எனும் தொனிப்பொருளில் ஆக்கங்களை சமர்பிக்க வேண்டும். அதிகபட்சமாக ஒரு பாடசாலையில் இருந்து பத்து கலையம்சங்களை காட்சிப்படுத்தலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நயன்தாராவுக்கு உண்மையில் பெரிய மனசுதான் !!(VIDEO)
Next post நாம் எதிர்பார்ப்பதை விட இங்கு ஏராளமாய் இருக்கு!!(PHOTOS)