ஐ.சி.சி. சாம்பியன்ஸ்.இறுதிப்போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி கிண்ணத்தை கைப்பற்றியது இந்தியா!!

Read Time:2 Minute, 3 Second

imagesஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் இறுதிப்போட்டியில் டோனி தலைமையில் இந்திய அணியும் – கூக் தலைமையிலான இங்கிலாந்து அணிகளுக்கும் இடையே போட்டி நடைபெற்றது. மழையின் காரணமாக அது 20 ஓவர் போட்டியாக அறிவிக்கப்பட்டது.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி, பீல்டை தேர்வு செய்தது. இந்திய அணியின் தொடக்க வீரர்களாக சர்மா மற்றும் தவான் களமிறங்கினர். சர்மா 9 ரன்கள் எடுத்த நிலையில், ப்ராட் பந்துவீச்சுக்கு ஆட்டமிழந்தார்.

விராட் கோலி 34 பந்துகளுக்கு 43 ரன்கள் எடுத்தார். அதன்பிறகு ஆடிய ரெய்னா 1 ரன்னுக்கும், டோனி ரன்கள் எதுவும் எடுக்காமல் அவுட் ஆகி வெளியேறினர். ஜடேஜா 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். பின்னர் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் எடுத்தது.

இதனை தொடர்ந்து 130 ரன்கள் இலக்கு என்ற நிலையில் களமிறங்கிய இங்கிலாந்து அணியினரின் விக்கட்டுகள் சரியத் தொடங்கியது.

இறுதி ஓவரில் 15 ஓட்டங்கள் எடுத்தால் மட்டுமே வெற்றி என்ற நிலைக்கு இங்கிலாந்து தள்ளப்பட்டது.

விறுவிறுப்பாக சென்ற இறுதி ஓவரில் இங்கிலாந்து அணியினரால் 9 ஓட்டங்கள் மட்டுமே பெற முடிந்தது.

20 ஓவர்கள் முடிவில் 8 விக்கட்டுகளை இழந்து 124 ஓட்டங்களை மட்டுமே பெற்ற இங்கிலாந்து இந்தியாவிடம் தோல்வியை தழுவியது

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பொது இடத்தில் உள்ளாடை மாற்றுவதெல்லாம் ஒரு வீர விளையாட்டாகிவிட்டது .. (வீடியோ)
Next post ஆணுறுப்பின் வடிவில் கத்தரிக்காய்!!(PHOTOS)