வரும் செப்டெம்பரில் ராஜா ராணி ரிலீஸ் !!
வெளிவர இருக்கும் படங்களில் மிகவும் பிரகாசிக்க கூடியவர் என திரை உலகின் வல்லுனர்கள் கணிக்கும் இளம் இயக்குனரான அட்லீ இயக்கும் படம் ‘ராஜா ராணி’. இந்தக் கதையாக இருக்குமா இல்ல அந்தக் கதையாக இருக்குமா என்று எல்லோரையும் யூகிக்க வைக்கும் கதை அமைப்பு ஆகட்டும், பிரமிக்க வைத்த ஆர்யா-நயன்தாரா ‘திருமணம்’ பற்றிய விளம்பரம் ஆகட்டும், அந்தவகையில் ‘ராஜா ராணி’ படம் உச்ச நட்சத்திரங்களின் படங்களுக்கு இணையாக பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையடுத்து தன்னைப் பற்றியும், தான் இயக்கிவரும் படம் பற்றியும் மனம் திறக்கிறார் அட்லீ. ‘இது ஒரு முழுக்க முழுக்க ஒரு ஜனரஞ்சகமான குடும்பச் சித்திரம். திருமணத்துக்கு பிந்தைய ஒரு இனிமையான கால கட்டத்தைப் பற்றிய படமாகும். இன்றைய இளைஞர்கள் திருமண உறவு என்றாலே எட்டிக்காயாய் பாவிக்கும் மன நிலையை மாற்றும் படமாக இருக்கும் என்கிறார்.
ஆர்யாவும், நயன்தாராவும் நடிக்காமல், அந்த கதாப்பாத்திரமாகவே வாழ்ந்து இருக்கிறார்கள். அவர்களுக்குள் திரையைத் தாண்டிய ஒரு உறவு பட்டவர்த்தனமாக இருக்கிறது. ஒருவரை ஒருவர் கிண்டல் செய்து கொள்வது ஆகட்டும், உதவிக் கொள்வது ஆகட்டும், வாஞ்சையுடன் அழைப்பது ஆகட்டும் அருமை!
அந்த வகையில் என்னுடைய விளம்பர யுக்திக்கு அவர்கள் கொடுத்த ஒத்துழைப்பு சூப்பர்! இந்தப் படத்தின் கதையைப் பற்றி வந்த சர்ச்சைகள் என்னைக் காயப் படுத்தினாலும், பின்னர் என்னை நானே ஆசுவாசப்படுத்திக் கொண்டு, நல்ல தரமான படம் கொடுப்பதே. அதை இதற்கான மருந்து என நினைத்து உழைக்க ஆரம்பித்து விட்டேன். ஷங்கர் சாரின் பாசறையில் பயின்றவன் என்ற பெருமை எனக்கு என்றும் உரியது. ஒரு தந்தையுடனான உறவு எனக்கு அவரிடத்தில் என்றும் உண்டு. முருகதாஸ் சார் அவர்களையும், என்னால் மறக்க முடியாது.
கதையைக் கேட்ட உடனே எனக்கு அட்வான்ஸ் கொடுத்து படம் பண்ணலாம் என்ற அவர், என் மீது வைத்த நம்பிக்கையை நான் என்றென்றும் மறவேன். ஃபாக்ஸ் ஸ்டார்ஸ் ஸ்டூடியோஸ் நிறுவனத்துக்கு நான் படம் செய்யும் வாய்ப்பு கிட்டி இருக்கிறது என்பதை என்னால் இன்னமும் நம்ப முடியவில்லை.
அதேபோல் என்னுடைய ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் வில்லியம்ஸ் மற்றும் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இருவரும் இப்படத்தின் முக்கியத் தூண்கள். நான் இப்படத்தின் நடிகர்கள் பட்டியலை வாசித்தால், இது எவ்வளவு பெரிய படம் எனத் தெரிய வரும். ஆர்யா, ஜெய், சத்யராஜ், சந்தானம், சத்யன், நயன்தாரா மற்றும் இன்றைய சென்ஷேசன் நஸ்ரியா நசீம் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
ஆகஸ்ட் மாதம் இசையை வெளியிட்டவுடன், செப்டம்பர் மாதம் ரிலீஸ் ஆக உள்ள இப்படம் நிச்சயம் இளைஞர்களைக் கவரும் எனக் கூறுகிறார் அட்லீ.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating