கொரியாவில் உல்லாசக் கப்பல் ஹோட்டல்!!

Read Time:1 Minute, 39 Second

1029shipதென்கொரியாவிலுள்ள ஆடம்பர ஹோட்டலொன்று பிரமாண்ட கப்பலின் தோற்றத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. திடீரென பார்த்தால் உல்லாசக் கப்பலொன்று சுனாமி அலைகளினால் அடித்துச் செல்லப்பட்டு பாறையொன்றின் உச்சியில் வைக்கப்பட்டிருப்பதை போல் அக்கட்டடம் காணப்படுகிறது.

சன் குருஸ் ரிசோர்ட் எனும் இந்த ஹோட்டல் தென்கொரியாவின் ஜியோடொங்ஜின் நகரில் உள்ளது. இந்த ஹோட்டலின் வெளித்தோற்றம் மாத்திரமல்லாமல் உட்புறமும் உல்லாசக் கப்பல் பாணியிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஹோட்டலின் வாடிக்கையாளர்கள் உல்லாசக்கப்பலில் உள்ள சகல வசதிகளையும் அனுபவிக்க முடியும்.

இந்த ஹோட்டல் கப்பல் கடல்நீரில் மிதக்கமாட்டாது என்பது மாத்திரமே ஒரு வித்தியாசம். 211 அறைகளைக் கொண்ட இந்த ஹோட்டலில் 6 உணவு விடுதிகள், கடல்நீர் நிரப்பப்பட்ட நீச்சல் தடாகங்கள், உடற்பயிற்சிக்கூடம். கோல்வ் திடல் ஆகியனவும் உள்ளன. இந்த ஹோட்டலில் ஓர் இரவு தங்குவதற்கு சுமார் 80,000 தென்கொரிய வொன் (சுமார் 9,000 இலங்கை ரூபா கட்டணமாக அறவிடப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மாணவி கடத்தப்பட்டு கிருமி நாசினி கொடுத்த சம்பவம்
Next post ஆசியாவிலேயே உயரமான புத்தர் சிலைக்கு வவுனியாவில் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது!!