மாணவர்களின் தாய்மாரை பாலியல் துஷ்பிரயோகம் செய்து அச்சுறுத்தி பணம் சம்பாதித்து வந்த ஆசிரியர் கைது

Read Time:2 Minute, 23 Second

arrest_10மாத்தறை நகர் மற்றும் பல முக்கிய நகரங்களில் தனியார் ஆங்கில வகுப்புகளை நடத்தி வந்த ஆசிரியரொருவர் வகுப்புகளுக்கு வரும் மாணவ மாணவிகளின் தாய்மாரை வஞ்சகமானமுறையில் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி பின்னர் அவர்களை அச்சுறுத்தி பணம் பெற்றது தொடர்பாக மாத்தளை பண்டந்தர என்ற இடத்தில் வைத்து மாத்தளை பொலிஸார் மேற்படி ஆசிரியரை கடந்த 10 ஆம் திகதி கைது செய்துள்ளனர்.

இந்த ஆங்கில ஆசிரியர் மாத்தறை கம்புறுபிட்டிய உட்பட பல இடங்களில் தனியார் ஆங்கில வகுப்புகளை நடத்தி வரும் 28 வயது நபராவார்.

வகுப்புகளுக்கு வரும் மாணவர்களிடம் தனிப்பட்ட தகவல்களைப் பெற்று தந்தைமார் வீட்டில் இல்லாத சந்தர்ப்பத்தில்அங்கு சென்று சகஜமாகப் பழகி நட்புறவை ஏற்படுத்திக் கொள்வதை வழக்கமாக கொண்டு பின்னர் தமது வாகனத்தில் ஏற்றிச் சென்று பாலியல் படங்களை பார்க்கச் செய்து சூட்சுமமான முறையில் ஹோட்டல்களுக்கு அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளாக்கி அதை வீடியோவில் பதிவு செய்து அதை வெளியிடுவதாக அச்சுறுத்தி தொடர்ந்தும் பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளாக்குவது இவரது வழக்கமாகும்.

அது மட்டுமன்றி இப் பெண்களை அச்சுறுத்தி பெருந்தொகைப் பணத்தையும் பெற்றுக்கொண்டதாக கிடைத்த முறைப்பாட்டை அடுத்தே இந்த ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார் இவரது வாகனத்திலிருந்து பெருந்தொகையான பாலியல் காட்சிகள் அடங்கிய வீடியோ நாடாக்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

மாத்தளை பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விளம்பரங்கள் மூலம் கோடீஸ்வரியாக நடித்து பத்துப் பேரை திருமணம் செய்து சொத்துக்களை அபகரித்த பெண் கைது
Next post காதலனையும் நண்பனையும் அச்சுறுத்திய நபர்களால் யுவதி பாலியல் துஷ்பிரயோகம்