விளம்பரங்கள் மூலம் கோடீஸ்வரியாக நடித்து பத்துப் பேரை திருமணம் செய்து சொத்துக்களை அபகரித்த பெண் கைது

Read Time:2 Minute, 20 Second

961wedகோடீஸ்வரப் பெண்ணாக நடித்து பத்திரிகைகளில் திருமண விளம்பரங்களை பிரசுரித்து மேலிடத்து நபர்களை சட்டபூர்வமாக திருமணம் செய்து கோடிக்கணக்கான பணத்தையும் சொத்துக்களையும் மோசடி செய்ததாகக்கூறப்படும் பெண்ணொருவரை களுத்துறை வடக்கில் பாணந்துறை குற்றப்புலனாய்வுத்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

37 வயதான இப்பெண் பத்துப் பேரை இவ்வாறு மோசடி செய்து திருமணம் செய்துள்ளதாகவும் பத்துப்பேரில் வர்த்தகர்களும் இராணுவ மேஜர்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இப்பெண் பத்திரிகைகளில் திருமண விளம்பரங்களைப் பிரசுரித்து திருமணமாகாத வர்த்தகர்களை வீட்டுக்கு வரச் செய்து அவர்களை திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்து உடனடியாக பதிவுத் திருமணம் செய்து பின்னர் பல்வேறு காரணங்களைக் கூறி அவர்களிடம் லட்சக்கணக்கில் பணத்தை பெற்றுள்ளதாகவும் விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது.

பணம் பெற்ற பின்னர் பல்வேறு வகையில் பொருத்தமில்லை எனத் தெரிவித்து அந்நபர்களைத் தவிர்த்து விட்டு விவாகரத்து பெற முயற்சிப்பதாகவும் கூறப்படுகிறது.

சந்தேகநபரின் மோசடியில் சிக்கிய இருவர் பாணந்துறை குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு செய்து கொண்ட முறைப்பாட்டை அடுத்து இப்பெண்ணை கைது செய்யப்பட்டுள்ளார்.

களுத்துறை வடக்கில் ஆடம்பர வீடொன்றில் தமது தாயுடன் வசிக்கும் பெண்ணின் மோசடிக்கு தாயும் உடந்தையாக இருந்துள்ளார்.

பாணந்துறை பொலிஸார் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தமிழ்க் கொலையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ள அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம்
Next post மாணவர்களின் தாய்மாரை பாலியல் துஷ்பிரயோகம் செய்து அச்சுறுத்தி பணம் சம்பாதித்து வந்த ஆசிரியர் கைது