தமிழ்க் கொலையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ள அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம்

Read Time:2 Minute, 6 Second

002அரசாங்க தகவல் திணைக்களத்தின் மாதாந்த சிங்கள செய்திச் சஞ்சிகையான ‘தெசதிய”வின் 35 வருட பூர்த்தி விழாவும் புதிய இணையத்தள அங்குரார்ப்பணமும் இன்று (12) புதன் கிழமை முற்பகல் 10.00 மணிக்கு தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

தகவல் திணைக்களத்தின் இப்புதிய (www.dgi.gov.lk) இணையத்தளத்தை தகவல் ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

இந்த இணையத்தளம் ஆரம்பத்திலேயே தமிழ்க் கொலையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது இணையத் தளத்தின் முகப்பில் திணைக்களம் என்பதற்கு பதிலாக உச்சரிக்க முடியாத வேறொரு திணகை்களம்) சொல் பொறிக்கப்பட்டுள்ளது.

அங்குள்ள தமிழ் எனும் சொல்லைத் சொடுக்கினால் உள்ளே உள்ள செய்தியில் உள்ள படத்தில் தமிழுக்குப் பதிலாக ‘நமிழ்’ உள்ளதை அவதானிக்க முடிகின்றது.

தமிழ் – சிங்களம் தேசிய மொழி என்ற தொனிப்பொருளில் நாடெங்கிலும் தமிழர்களுக்கு சிங்களமும், சிங்களவர்களுக்கு தமிழும் கற்பிக்கப்பட்டுவருகின்ற காலகட்டத்தில் இவ்வாறான தவறுகள் மேலெழாமல் உயரதிகாரிகள் மிகக் கவனமெடுத்தல் வேண்டும்.

சிங்களவர்கள் இவ்விணையத்தளத்தினுள் உள்நுழைந்தால் அங்குள்ள ‘திணகை்களம்’ எனும் சொல்லே சரியெனக் கருதி அவ்வாறு எழுதத் தொடங்குவர். எனவே, ஒருமொழியின் சுயாதீனத்தன்மை இல்லாதழிந்து போக இவ்வாறான விடயங்கள் காரணமாக அமைகின்றன.

003
002

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காதலனையும் நண்பனையும் அச்சுறுத்திய நபர்களால் யுவதி பாலியல் துஷ்பிரயோகம்
Next post விளம்பரங்கள் மூலம் கோடீஸ்வரியாக நடித்து பத்துப் பேரை திருமணம் செய்து சொத்துக்களை அபகரித்த பெண் கைது