கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…

Read Time:4 Minute, 34 Second

chikki-mukki_133491157716நிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள் அனுப்பும் புகைப்படங்களையும் அதுகுறித்த செய்திகளையும் பிரசுரித்து வருகிறோம். அந்த ரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்களே உங்களுக்குக் கிடைக்கும் ஆரோக்கியமான, பயனுள்ள புகைப்படங்களையும் அதுகுறித்த செய்திகளையும் எமக்கு (நிதர்சனம்.நெற் இணையத்தின் மின்னஞ்சல் முகவரிக்கு) அனுப்பி வைக்கவும்…

லண்டனில் ஹரே கிருஷ்ணா இயக்கத்தினர் நடத்திய 45வது ரத யாத்திரையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஜெகன்னாதர், சுபத்திரா, பலராமர் ரதங்களை இழுத்து சென்றனர்.
திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டியில் கோரா பட்டு சேலை நெசவு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள பெண் தொழிலாளி.

 

திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் வேளாண் விளைபொருட்கள் வைக்கப்பட்டிருந்த தனியார் குடோனில் தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்க போராடும் வீரர்கள்.

கோவை உக்கடத்தில் உள்ள பெரிய குளத்தை தூர்வாரி சுத்தம் செய்யும் பணியில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தாமாக முன்வந்து ஈடுபட்டனர்.

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே கிராமத்துக்குள் புகுந்த யானைக்கூட்டம் விளைநிலங்களை நாசம் செய்துவிட்டு வனப்பகுதிக்கு திரும்பி செல்கின்றன. உள்படம்: தென்னந்தோப்பில் புகுந்து சுற்றித்திரிந்த யானைகளில் ஒன்று வாழை தோட்டத்தை நோக்கி வருகிறது.

குமரி மாவட்டத்தில் பெய்து வரும் கன மழையால் திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதில் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பான முறையில் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்

சிவகங்கை அருகே நரியனேந்தல் உச்சி முத்தையா சாமி கோயில் திருவிழா நடந்தது. இதையொட்டி சிவகங்கை , இளையான்குடி சாலையில் இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடத்தப்பட்டது. முந்திச்சென்று முதலிடத்தை பிடிக்க மாடுகளை விரட்டும் வீரர்கள்.

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் அமாவாசையை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று அம்மன் தரிசனம் செய்தனர். உள்படம்: மலர் அலங்காரத்தில் ஊஞ்சலில் அமர்ந்து பக்தர்களுக்கு காட்சி தரும் அம்மன்.

சென்னையில் நேற்று பல பகுதிகளில் திடீரென மழை கொட்டியது.மெரினா கலங்கரை விளக்கம் அருகே சிலைக்கு அடியில் மழைக்கு ஒதுங்கியுள்ள மாணவர்கள்.

மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு ஆண்டுதோறும் ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு அணையில் 17 அடி தண்ணீர் மட்டுமே இருப்பதால், நாளை அணையை திறக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அணையின் இடது கரை பகுதியில் குட்டைபோல் தண்ணீர் தேங்கிக் கிடக்கிறது.

சேப்பாக்கம் விருந்தினர் விடுதி அருகே பல்வேறு சங்கங்களின் உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் நடக்கும். அங்கு பாதுகாப்புக்கு வரும் போலீசார் இரும்பு தடுப்பு வேலி அமைக்கும் பணியையும் செய்கின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post என்னவொரு வில்லங்கமான விளையாட்டு … !! (வீடியோ)
Next post இது திரைப்படத்தில் அல்ல, ஆனால் திரையரங்கில் நடந்தது