3டி பிரிண்டிங் மூலம் உருவாக்கப்படும் கார்!!

Read Time:2 Minute, 33 Second

905Terry-Wohlers-3D-Printing-Expert-in-the-3D-Printed-Car-Urbeeதொலை­தூ­ரத்தில் உள்­ள­வர்­க­ளுடன் தொலை­பேசி மூலம் பேசு­வ­தற்கு கற்றுக் கொண்ட மனிதன் பின்னர் காகித ஆவ­ணங்­களை பெக்ஸ் மூலம் அனுப்பத் தொடங்­கினான். அதன்பின் இணையம் ஊடாக புகைப்­ப­டங்கள், வீடியோ மற்றும் பல்­வேறு மென்­பொ­ருட்­களை அதன் தரம் மாறாமால் அனுப்பும் தொழில்­நுட்பம் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது. இப்­போது இவற்­றை­யெல்லாம் பின்­தள்ளும் விதத்தில் 3டி பிரிண்டிங் எனும் முப்­ப­ரி­மாண அச்­சிடல் இயந்­தி­ரங்கள் மூலம் முப்­ப­ரி­மாண பொருட்­க­ளையும் அனுப்பும் நட­வ­டிக்­கைகள் ஆரம்­ப­மா­கி­யுள்­ளன.

அமெ­ரிக்­காவில் அண்­மையில் துப்­பாக்­கி­யொன்று 3டி பிரிண்டிங் மூலம் அனுப்­பப்­பட்­டது. இந்­த­வ­ரி­சையில் 3டி பிரிண்டிங் மூலம் உரு­ வாக்­கப்­பட்ட கார் இன்னும் இரு வரு­டங்­க­ளுக்குள் வீதியில் ஓடும் என்­கி­றது ஸ்ட்ராடேஸிஸ் எனும் இஸ்­ரே­லிய நிறு­வனம். கே.ஓ.ஆர். எக்­கோ­லொஜிக் எனும் நிறு­வ­னத்­துடன் இணைந்து இக்­காரை தயா­ரிக்கும் நட­வ­டிக்­கையில் மேற்­படி நிறு­வனம் ஈடு­பட்­டுள்­ளது. இந்த காருக்கு என ஏர்பீ2 பெய­ரி­டப்­பட்­டுள்­ளது. ‘ 3டி பிரிண்டிங் மூலம் உரு­வாக்­கப்­பட்ட கார் வீதிக்கு வரும்நாள் வெகு தொலைவில் இல்லை.

எரி­பொருள் சிக்­கனத் தன்­மை­யு­டை­ய­தாக இந்த காரை நாம் தயா­ரிக்­கிறோம்’ என கே.ஓ.ஆர். எக்­கோ­லொஜிக் நிறு­வ­னத்தை சேர்ந்த ஜிம் கோர் தெரி­வித்­துள்ளார். வழக்­க­மான கார்கள் நூற்­றுக்­க­ணக்­கான அல்­லது ஆயி­ரக்­க­ணக்­கான சிறிய பாகங்­களைக் கொண்­டுள்ள போதிலும் ஏர்பீ 2 காரா­னது 40 பாகங்களையே கொண்டிருக்கும். இதனால் இக்காரை 3 பிரிண் டிங் மூலம் உருவாக்குவது சாத்தியமானதாகும்’ என அவர் கூறியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருநங்கையிடம் பாலியல் பலாத்கார முயற்சி: போலீஸ் புகார் வாங்க மறுப்பதாக குற்றச்சாட்டு!!
Next post லேடி காகாவின் விரல் நகத்துக்காக $13,000 கொடுத்த ரசிகன் !!(VIDEO)