ராஜீவ்காந்தி கொலை கைதிகள் முருகன், நளினி 2-வது நாளாக உண்ணாவிரதம்

Read Time:1 Minute, 41 Second

ragivkanthi.gifராஜீவ்காந்தி கொலை வழக்கில் முருகன் அவருடைய மனைவி நளினி, சாந்தன், பேரறிவாளன் உள்பட 20 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் முருகன், நளினி, பேரறிவாளன், சாந்தன் ஆகியோருக்கு பூந்த மல்லி கோர்ட்டு 1998-ம் ஆண்டு தூக்கு தண்டனை விதித்தது. இதனை ஆயுள் தண்ட னையாக குறைக்கக்கோரி அவர்கள் ஜனாதி பதிக்கு கருணை மனு அனுப்பினார்கள். அந்த நேரத்தில் நளினி கர்ப்பமாக இருந்ததால் அவருக்கு மட்டும் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. ஆயுள் தண்டனை கைதியான நளினி வேலூர் பெண்கள் ஜெயிலிலும், முரு கன் உள்பட மற்றவர்கள் வேலூர் ஆண்கள் ஜெயிலிலும் உள்ளனர்.

இதற்கிடையே ஜெயிலில் இருக்கும் முருகன், நளினி நேற்று திடீரென உண்ணாவிரதம் இருந்தனர். அவர்களது உண்ணாவிரத போராட்டம் இன்று 2-வது நாளாக நீடித்தது. முருகன், நளினி தம்பதியினரின் மகள் அரித்ரா (வயது15) இலங்கையில் உள்ளார். அவரை தமிழ் நாட்டில் தங்கி படிக்க விசா வழங்க வேண்டும் என்று கோரி அவர்கள் இந்த உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்த மாதிரி முருகன் 8 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post கடைசி நிமிடத்தில் கோல்: ஜெர்மனி போராடி போலந்தை வீழ்த்தியது. ஸ்பெயின்,ஜெர்மனி வெற்றி; சௌதி-டுனீசியா டிரா
Next post இலங்கை தமிழர் ஆதரவு போராட்டம்ராமதாஸ் திடீர் விலகல்