சவுதியில் முதலாளிக்கு ‘சூனியம்’ இந்தியர் கைது!!

Read Time:1 Minute, 25 Second

free-criminal-arrest-records-searchசவுதி அரேபியாவில் பணியாற்றும் இந்தியர் ஒருவருக்கு சில நாட்களுக்கு முன்னர் தபால் மூலம் மர்ம கவர் ஒன்று வந்தது. அந்த கவர் மீது சந்தேகப்பட்ட தபால் பட்டுவாடா பிரிவினர் அதை பிரித்து சோதனையிட்டபோது சில செம்பு தகடுகளும், வேறு சில பொருட்களும் இருந்தன.

இது தொடர்பாக அந்த இந்தியரிடம் ‘கவரில் என்ன இருந்தது?’ என்று போலீசார் கேட்டபோது, நான் விரைவில் பணக்காரன் ஆவதற்கான மந்திர வாசகங்கள் கவரினுள் உள்ளன என அவர் விளக்கம் அளித்தார். இதனையடுத்து, அவரை கைது செய்த போலீசார் தீவிரமாக விசாரித்தனர். முதலாளிக்கு சூனியம் வைத்து அவரது செல்வத்தை அபகரிக்க முயற்சி செய்ததாக அவர்மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரிடம் மேலும் விசாரித்து வருகின்றனர்.

சவுதி அரேபியாவின் சட்டத்தின்படி, பில்லி, சூனியம், மந்திரம், தந்திரம் போன்றவை தண்டனைக்குரிய குற்றங்களாக கருதப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சமூகத்திற்கு நற்கருத்தை சொல்வதற்காக இடம்பெற்ற பேஷன் ஷோ!!(PHOTOS)
Next post ஐரோப்பாவிலும் டுனிஷியாவிலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள டொப்லெஸ் ஆர்ப்பாட்டங்கள்!!