கடைசி நிமிடத்தில் கோல்: ஜெர்மனி போராடி போலந்தை வீழ்த்தியது. ஸ்பெயின்,ஜெர்மனி வெற்றி; சௌதி-டுனீசியா டிரா

Read Time:2 Minute, 50 Second

Football-germany-.jpgஉலக கோப்பை போட்டியின் 6-வது நாளான நேற்று `எச்’ பிரிவில் இடம் பெற்றுள்ள அணிகள் இடையேயான லீக் ஆட்டங்கள் நடந்தது. இதன் ஒரு ஆட்டத்தில் ஸ்பெயின் உக்ரைனை 4-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது. மற்றொரு ஆட்டத்தில் ஆசிய கண்டத்தில் உள்ள சவூதி அரேபியா, ஐரோப்பிய கண்டத்தில் இருந்து இந்த முறை முதன் முதலாக தகுதி பெற்ற துனிசியாவுடன் மோதியது. இந்த ஆட்டம் 2-2 என்ற கணக்கில் டிராவில் முடிந்தது.

மற்றொரு ஆட்டத்தில் `ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள ஜெர்மனி தனது 2-வது லீக் ஆட்டத்தில் அதே பிரிவில் உள்ள போலந்து அணியுடன் மோதியது. முதல் போட்டியில் ஆடாத ஜெர்மனி கேப்டன் பல்லாக் களம் இறங்கினார்.

இரு அணியிலும் தற்காப்பு ஆட்டம் சிறப்பாக இருந்தது. இதனால் ஆட்டநேர முதல் பாதியில் கோல் ஏதும் விழவில்லை. 2-வது பாதியில் கோல் அடிக்க இரு அணி வீரர்களும் ஆக்ரோசத்துடன் ஆடினார்கள். ஜெர்மனி அணிக்கு 10 கார்னர் கிக் கிடைத்தது. ஆனால் அனைத்தையும் அந்த அணி வீண் அடித்தது.

ஆட்டத்தின் 75-வது நிமிடத்தில் போலந்து வீரர் நாட்ஸ்லோவிக்கு `ரெட் கார்டு’ வழங்கப்பட்டது. இதனால் அந்த அணி 10 வீரர்களுடன் ஆடவேண்டிய நிலை ஏற்பட்டது. எனினும் அவர்களுடைய ஆட்டம் ஆவேசமாகவே இருந்தது. பலம் வாய்ந்த ஜெர்மனி அணி போலந்து வீரர்களுக்கு எதிராக ஒரு கோலை கூட அடிக்க முடியாமல் திணறியது.

மேலும் போலந்து கோல் கீப்பர் அர்த்தூர் 8 முறை ஜெர்மனி வீரர்களின் கோல் அடிக்கும் முயற்சியை தடுத் தார். அந்த அணிக்கு கடும் சோதனையை ஏற்படுத்தியது.

ஆட்டத்தின் கடைசி 90-வது நிமிடம் வரை இரு அணியும் கோல் அடிக்கவில்லை. இதனால் கூடுதலாக வழங்கப்பட்ட 3 நிமிடம் (வீரர்கள் காயம் அடைந்தபோது வீணான நேரம்) ஆட்டத்தின் உச்சகட்டமாக விளங்கியது. இதில் 91-வது நிமிடத்தில் ஜெர்மனி வீரர் நிï விலி கோல் அடித்தார். இதனால் ஜெர்மனி 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post அனுராதபுரத்தில் கண்ணி வெடித் தாக்குதலில் 58 பேர் பலி40 பேர் காயம்
Next post ராஜீவ்காந்தி கொலை கைதிகள் முருகன், நளினி 2-வது நாளாக உண்ணாவிரதம்