8 வயது தங்கையை குத்திக் கொன்ற 12 வயது அமெரிக்க சிறுவன்!!
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்தவர் பர்னி ஃபவுலர் (37). இவருக்கு 4 மனைவிகள் உள்ளனர். அவர்களில் மூவரை விவாகரத்து செய்துவிட்டு தனது 7 குழந்தைகளுடன் 4வது மனைவியுடன் இவர் வாழ்ந்து வருகிறார். கடந்த மாதம் இவரது மகள் லெய்லா ஃபவுலர் (8) உடல் முழுக்க கத்திக் குத்து காயங்களுடன் ரத்தவெள்ளத்தில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். சதை பிடிப்புடன் சிகப்பாக இருந்த மர்ம மனிதன் அவளை கத்தியால் குத்திவிட்டு ஓடிவிட்டதாக அவளது 12 வயது அண்ணன் பெற்றோரிடம் கூறினான்.
ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த லெய்லா, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தாள். மர்ம மனிதனை பிடிக்க போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியபோது கொலையான சிறுமியின் அண்ணன் கூறிய வாக்குமூலம் முன்னுக்குப்பின் முரணாக இருப்பதை உணர்ந்தனர். இதனையடுத்து, அவனை ‘உரிய’ முறையில் விசாரித்தபோது, ‘தங்கையுடன் ஏற்பட்ட தகராறில் நான்தான் ஆத்திரத்தில் கத்தியால் குத்தினேன்.
எதிர்பாராத விதமாக அவள் இறந்து விட்டாள்’ என்ற உண்மையை கக்கினான். இவன் மீதான வழக்கு கலிபோர்னியா நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அமெரிக்க நாட்டின் சட்டத்தின்படி, 14 வயதுக்குட்பட்டவர்களை சிறையில் அடைக்கக் கூடாது என்பதால் பிலேசர் வில்லியில் உள்ள சிறார் சீர்திருத்தப் பள்ளியில் அவன் அடைக்கப்பட்டுள்ளான். குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் 23 வயதுக்கு பின்னர் சீர்திருத்தப் பள்ளியில் இருந்து அவன் விடுதலை ஆவான்.
குற்றத்தை நிரூபிப்பதற்கு அரசு தரப்பில் போதிய சாட்சிகள் இல்லாத பட்சத்தில் இடைக் காலத்திலேயே அவன் விடுதலை ஆவதற்கு வாய்ப்புகள் அதிகம். 8 வயது மகளை இழந்த வேதனையை சுமந்தபடி, இளம் குற்றவாளியான தனது 12 வயது மகனை வாரம் இருமுறை சீர்திருத்தப் பள்ளிக்கு சென்று அவனது தந்தை சந்தித்து வருகிறார்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating