பேஸ்புக்கில் பிறந்தநாள் வாழ்த்து சொன்ன தந்தை சிறையில் அடைப்பு!!

Read Time:2 Minute, 55 Second

020இங்கிலாந்து நாட்டில் 21 வயதான மகனுக்கு பேஸ்புக்கில் பிறந்தநாள் வாழ்த்து அனுப்பியதற்காக அவரது தந்தை சிறையில் அடைக்கப்பட்டார் என்று தகவல் வெளிவந்துள்ளது. கார்ரி ஜான்சன்(46) தன்னுடைய மனைவியை 8 வருடங்களுக்கு முன்னர் விவாகரத்து செய்துள்ளார். இதனால் அவர் தனது இரண்டு மகன்களையும் எதிர்காலத்தில் அவர்களின் திருமண நிச்சயதார்த்ததின்போதோ, திருமணத்தின்போதோ மற்ற எதற்காகவும் அவர் வாழ்த்தக்கூடாது என்ற அறிவிப்பு உள்ளூர் பத்திரிகையில் வந்தது.

இது அவரது வாழ்நாள் முழுவதற்குமான தடை என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை மீறி, அவர் தற்போது தன்னுடைய மகனுக்கு பேஸ்புக் மூலம் பிறந்தநாள் வாழ்த்து அறிவித்ததால், விதிமுறையை மீறியதாக கைது செய்யப்பட்டு சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளார். முன்னாள் இசை அமைப்பாளரான ஜான்சன்தான் தன்னுடைய மகன்களை வார்த்தார். அவருடன்தான் அவர்கள் வாழ்ந்து வருகின்றார்கள். ஆயினும், சென்ற மாதக் கடைசியில் குடும்ப நீதிமன்றம் ஒன்றால் கைது செய்யப்பட்டு, நீதிபதி ஒருவரால் தீர்ப்பு சொல்லப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட ஜான்சனைக் காவல்துறையினர் முறையாகக் கைது செய்யவில்லை. மேலும், அவர் சார்பாக வாதிட எந்த வழக்கறிஞரும் நியமிக்கப்படவில்லை.

இந்தக் கைது சம்பவம் இங்கிலாந்து நாட்டில் நடைபெறும் நிழல் உலக செயல்பாடுகளை வெளிக்காட்டுவதுபோல் இருப்பதாகத் தெரிகின்றது. இந்தத் தீர்ப்பு கொடுமையானதாகவும், விமர்சிக்கத்தக்க விதத்தில் இருப்பதாகவும் அவரது மகன்கள் வெள்ளிக்கிழமை அன்று தெரிவித்துள்ளனர். தன்னுடைய தந்தை நல்லவர் என்றும், அவர் எப்போதுமே காவல்துறையினரிடம் பிரச்சினை செய்ததில்லை, எனவே அவரை குற்றவாளிபோல் நடத்துவது தவறு என்றும் அவரது மகன் சாம் கூறியுள்ளார். மேலும், இதுபோன்ற விமர்சிக்கக்கூடிய நடைமுறைகள் தொடர்ந்து நீடித்திருக்கக்கூடாது என்றும் அவர் கருத்து தெரிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 15 வயதுச் சிறுமியை கர்ப்பிணியாக்கிய 19 வயது இளைஞன் கைது!!
Next post நைஜீரியா பெண்களை ஸ்பெயின் சாலையோரங்களில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 6 பேர் கைது!!