பனிப்பாறைகளில் புதையுண்ட 400 ஆண்டுகள் பழைமையான மரம் மீண்டும் வளரும் அதிசயம்!!

Read Time:2 Minute, 25 Second

838_newsthumb_bryoகனடா நாட்டிலுள்ள பனிப்பாறைகளிடையே புதையுண்ட 400 ஆண்டுகளுக்கு பழைமையான மரம் மீண்டும் தளிர் விட்டு வளர ஆரம்பித்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். கனடாவின் அல்பர்டா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் மற்றும் இங்கிலாந்தின் ஆய்வாளர்கள் இணைந்து மேற்கொண்ட ஆய்வுகளின் போதே குறித்த விடயம் தெரிவயவந்துள்ளது. வெப்பம் காரணமாக, பனிப்பாறைகள் வேகமாக உருகி வருவதால் பல நூறு ஆண்டுகளுக்கு முன் புதையுண்ட மரங்கள் தற்போது வெளியில் தெரிய ஆரம்பித்துள்ளது.

குறித்த ஆராய்ச்சி குழு மேற்கொண்ட ஆய்வின் போது 400 ஆண்டுகளுக்கு முன் புதையுண்ட மரத்தின் தண்டுப் பகுதி கிடைத்துள்ளது. இதனை இங்கிலாந்திலுள்ள ஆய்வகத்தில் ஆய்வுக்குட்படுத்தியதில் புதிய கிளைகள் முளைத்துள்ளன. இதுகுறித்து, ஆராய்ச்சியாளர் ஒருவர் கூறுகையில், கனடாவில், 400 ஆண்டுகளுக்கு முன்னர் புதையுண்ட மரத்தின் தண்டுப் பகுதி கண்டுபிடிக்கப்பட்டது. இவை, ‘பிரையோபைட்ஸ்’ என்று அழைக்கப்படுகின்றன. இவ்வகை மரங்கள், வெட்டுப்பட்ட பின்னும், உயிர் வாழ்கின்றன. பனிப்பாறைகளிடையே இதன் வளர்ச்சி தடைப்படுகின்றது. பின்னர் சாதகமான தட்பவெட்ப நிலை ஏற்படும் பட்சத்தில் அவை மீண்டும் வளர்கின்றன.

இவ்வகை மரங்கள், தரையில் வளரும் சாதாரண மரங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டவை. இதில், வெஸ்குலர் இழையங்கள் இல்லர்மையினால், மரத்தின் ஒரு பகுதியிலிருந்து மற்ற பகுதிக்கு உணவு பரிமாற்றத்தில் தடை ஏற்படுகிறது. மரத்தின் ஒவ்வொரு பகுதியும், தனக்கான உணவை தானே தயாரித்துக் கொள்கிறது எனத் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆசிட் வீச்சால் ஒருமாத காலம் உயிருக்குப் போராடிய நர்ஸ் பலி!!
Next post 15 வருடங்களாக தேள் உட்கொண்டு வாழ்பவர்!!