அழகுக்காக நாடு கடத்தப்பட்ட இளைஞருக்கு மெர்சிடிஸ் காரை பரிசளித்த பெண்!!

Read Time:3 Minute, 24 Second

796galaமிக அழ­காக இருப்­பதால் சவூதி அரே­பி­யா­வி­லி­ருந்து நாடு கடத்­தப்­பட்ட டுபாய் இளை­ஞ­ரான ஒமர் பொர்கான் அல் காலா­வுக்கு பிறந்த நாள் பரி­சாக ‘மெர்­சிடிஸ் ஜி 55’ ரக காரொன்றை பெண்­ணொ­ருவர் அனுப்­பி­வைத்­துள்ளார். ஆனால் அப்பெண் யார் என்­பது தெரி­ய­வில்­லையாம். 23 வய­தான ஒமர் பொர்கான் அல் காலா எனும் இந்த இளைஞர் சவூதி அரே­பி­யாவில் கடந்த மாதம் நடை­பெற்ற கலா­சார நிகழ்ச்­சி­யொன்றில் கலந்­து­கொண்­ட­போது அவரும் மேலும் இரு ஆண்­களும் சவூதி அதி­கா­ரி­களால் வெளி­யேற்­றப்­பட்­டனர். இவர்கள் மிக அழ­காக இருப்­பதால், மேற்­படி கலா­சார நிகழ்­வுக்கு வரும் பெண்கள் மயங்­கி­வி­டக்­கூடும் என இதற்கு காரணம் தெரி­விக்­கப்­பட்­டது. பின்னர் அவர்கள் சொந்த நாடான ஐக்­கிய அரபு எமி­ரேட்­ஸுக்கு நாடு கடத்­தப்­பட்­டனர்.

இச்­செய்தி ஊட­கங்­களில் வெளி­யா­னபின் உலகம் முழு­வதும் பிர­ப­ல­மான நப­ரா­க­pவிட்டார் அல் காலா. அதன்பின் கன­டாவின் வான்­கூவர் நக­ருக்கு இடம்­பெ­யர்ந்­து­விட்ட அல் காலா குறுந்­தி­ரைப்­ப­ட­மொன்றில் நடித்து வரு­கிறார். பெரும் எண்­ணிக்­கை­யான பெண்கள் அவரை சந்­திப்­ப­தற்கும் திரு­மணம் செய்­வ­தற்கும் விருப்பம் தெரி­வித்­துள்­ளனர். தினமும் ஆயி­ரக்­க­ணக்­கான மெசேஜ்கள் தனக்கு வரு­கின்­றன என்­கிறார் அல் காலா. இந்­நி­லையில், அண்­மையில் அவர் தனது பிறந்ததினத்தை கொண்­டா­டி­ய­போது பலர் அவ­ருக்கு பரி­சு­களை அனுப்­பி­வைத்­த­னராம். அன்­றைய தினம் அவரின் வீட்­டுக்கு வந்த ஒருவர் மெர்­சிடிஸ் ஜி 55 ரக ஆடம்­பர காரொன்றை அல் காலா­வுக்கு கொடுத்து ஆவ­ணங்­களில் கையெ­ழுத்­தி­டு­மாறு கோரி­னாராம். இந்த காரை பெண்­ணொ­ருவர் அனுப்­பி­வைத்­துள்­ள­தாக அவர் தெரி­வித்­துள்ளார். ‘எனது பிறந்த தினத்­தன்று மெர்­சிடிஸ் ஜி55 ரக காரொன்று எனது வீட்­டுக்கு அனுப்­பப்­பட்­டது.

எனக்கு அறி­மு­க­மில்­லாத பெண்­ணொ­ருவர் அதை அனுப்­பி­யுள்ளார். ஆவ­ணங்­களில் கையெ­ழுத்­திட்டு அதை பெற்­றுக்­கொள்­ளு­மாறு மாத்­திரம் எனக்கு கூறப்­பட்­டது’ என அல் காலா தெரி­வித்­துள்ளார். தான் இப்­போது பிர­ப­ல­மான ஒருவராக மாறிய நிலையிலும் தான் யதார்த்தமானவராகவே உள்ளதாகவும் தனது தலைக்கனம் அதிகரிக்கவில்லை எனவும் அல் காலா கூறுகிறார். ‘நான் தினமும் இறைவனை வணங்குகிறேன்’ என்கிறார் அவர்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காந்திமதியின் உயிரிழப்பிற்கு நீதி வேண்டுமென கோரிக்கை!!
Next post 14 வயது சிறுமியை கடத்தி அறுவர் பாலியல் பலாத்காரம்: மூவர் கைது!!