மோட்டார் பழுது பார்ப்பதற்காக கிணற்றில் இறங்கிய தொழிலாளி பலி தீயணைப்பு வீரர் மயக்கம்; ஒருவர் மீட்பு!!
மோட்டாரை பழுது பார்ப்பதற்காக கிணற்றில் இறங்கிய கூலித் தொழிலாளி பரிதாபமாக இறந்தார். மயக்கம் அடைந்த தீயணைப்பு வீரருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.ஆவடியை அடுத்த திருநின்றவூர் பக்தவச்சலம் நகர் அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் ராஜா (எ) நாகராஜ் (36). கூலித் தொழிலாளி.
மனைவி போதுமணி (32). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். அரக்கோணத்தை அடுத்த சோளிங்கர் தலக்கை கிராமத்தை சேர்ந்த இவரது உறவினர் மணிகண்டன் (24). இவர், சில நாட்களுக்கு முன்பு ராஜா வீட்டுக்கு வந்தார்.
ராஜா வீட்டில் உள்ள கிணற்றின் மோட்டார் நேற்று திடீரென பழுதானது. அதை சரி செய்வதற்காக மணிகண்டனை ராஜா கிணற்றில் இறக்கியுள்ளார். அப்போது மணிகண்டனுக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதை பார்த்த ராஜா, அவரை காப்பாற்ற கிணற்றுக்குள் இறங்கினார். மயங்கி விழுந்த இருவரும் சேற்றில் சிக்கியபடி உயிருக்கு போராடினர்.
அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், ஆவடி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதிகாரி தியாகராஜன் தலைமையில் வீரர்கள் விரைந்து வந்து கிணற்றில் கிடந்தவர்களை மீட்க முயன்றனர். மணிகண்டனை மீட்டு, கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
ராஜாவை காப்பாற்ற போராடிய தீயணைப்பு வீரர் ஜெயச்சந்திரனுக்கும் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. மயங்கி விழுந்த அவரை சக வீரர்கள் மீட்டு, அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, ராஜாவை மீட்கும் பணி தொடர்ந்தது. இரவு 11 மணிக்கு அவர் சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து திருநின்றவூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சத்யன் வழக்கு பதிவு செய்து விசாரிக்கிறார். ராஜா உடல், பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ஆக்சிஜன் இல்லாததே உயிரிழப்புக்கு காரணம்
தீயணைப்பு படையினர் மீட்பு பணிக்கு செல்லும்போது ஆக்சிஜன் சிலிண்டர், கயிறு, இரும்பு கொக்கி உள்ளிட்ட உபகரணங்களை கொண்டு செல்ல வேண்டும். பெரும்பாலான தீயணைப்பு நிலையத்தில் இந்த உபகரணங்கள் இல்லை.
இதனால் மீட்பு பணியின்போது உயிர்பலி ஏற்படுகிறது. ஆக்சிஜன் இல்லாததால்தான் ராஜாவை காப்பாற்ற முடியவில்லை. அம்பத்தூர் தீயணைப்பு நிலையத்தில் இருந்து ஆக்சிஜன் கொண்டு வர காலதாமதம் ஆனதும் உயிரிழப்புக்கு காரணமாகி விட்டது.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating