ஏலச்சீட்டு நடத்தி மக்களை ஏமாற்றிய 80 வயது மூதாட்டி கைது!!

Read Time:2 Minute, 4 Second

Police_2_tnbஏலச்சீட்டு நடத்தி 60 லட்சம் ரூபாய் மோசடி செய்த குற்றத்திற்காக 80 வயது பாட்டியை பொலிசார் கைது செய்துள்ளனர்.

புதுச்சேரி லாஸ்பேட்டை பெத்திசெட்டிப்பேட்டையை சேர்ந்தவர் சீனிவாசன்(வயது 82). அவரது மனைவி சரோஜா(வயது 80).

கடந்த, 20 ஆண்டுகளுக்கு முன், பெத்திசெட்டிபேட்டையில் குடியேறிய இவர், அக்கம் பக்கதில் உள்ள பெண்களுடன் பேசி பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார்.

இதனையடுத்து பெண்களி்டம், மொத்தமாக பணம் கொடுங்கள், அந்த பணத்தை வட்டிக்கு விட்டு, அதிலிருந்து கிடைக்கும் வட்டிப்பணத்தில் சீட்டு கட்டலாம் என மூதாட்டி சரோஜா கூறியுள்ளார்.

அதை நம்பிய பெண்கள் கணவனுக்கு தெரியாமல், நகைகளை அடமானம் வைத்து, பணம் கொடுத்துள்ளனர்.

ஏலச்சீட்டு முடிந்ததும் உறுதியளித்தப்படி, பணத்தை திரும்பி தரவில்லை. பல தடவை நேரில் கேட்டும், கிடைக்கவில்லை. இதன்பின் சீட்டு கட்டியவர்கள், லாஸ்பேட்டை பொலிசில் புகார் அளித்தனர்.

விசாரணையில் 12 பேரிடம், 60 லட்சம் ரூபாய் வரை மூதாட்டி மோசடி செய்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து சரோஜாவை பொலிசார் கைது செய்து, காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.

எஸ்.பி., ராமராஜு கூறுகையில், லைசன்ஸ் வாங்காமல், அனுமதி பெறாமல் ஏலச்சீட்டு நடத்துவது தவறு. இது தெரியாமல் லாபம் கிடைக்கும் என்ற ஆசையில் சீட்டு கட்டி ஏமாந்து விடுகின்றனர் என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பால் குடிப் பிள்ளையாக மாறிய தொலைக்காட்சி நிருபர்!!(PHOTOS)
Next post நான் ரொம்ப பிஸி: டாப்சி!!